218 கந்தவேள் கதையமுதம் காதல் நீங்கலா தலமரும் ஆருயிர்க் கரணம் ஆதி ஈசன தருளினால் அவனதா கியபோல் ஏதும் நீரிலா தழல்படு வெய்யகாள் இளையோன் போத லால்குளிர் கொண்டது நறுமலர்ப் பொழிலாய். (சுரம் புகு.22,) என்று இங்கே அந்த உபமானத்தைச் சொல்கிறார், கச்சியப்பர். ஆண்டவன் பாலைநிலத்தைக் கடந்து திருப்பரங்குன்றத்திற்கு வந்தான். அங்கே தவம் பண்ணிக் கொண்டிருந்தார்கள் பராசரருடைய பிள்ளைகளாகிய முனிவர்கள். அவர்களைப் பற்றி முன்பே பார்த் தோம். அவர்கள் ஆண்டவனை வணங்கினார்கள். முருகப் பெரு மானுடைய படைகளுடன் அவர்களும் சேர்ந்து கொண்டார்கள். திருச்செந்தூரை அடைதல் பின்னர் முருகன் திருச்செந்தூரை அடைந்தான். திருச் சீரலைவாயாகிய அங்கே ஓர் அழகிய மண்டபத்தை அமைக்கும்படி விசுவகர்மாவிடம் சொல்ல, அவன் அங்கே அழகிய மண்டபத்தையும் நகரையும் அமைத்தான். முருகப் பெருமான் அந்த மண்டபத் திடையே எழுந்தருளி, எல்லோரும் தன்னைச் வீற்றிருந்தான். சேவிக்க
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/238
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை