பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 கந்தவேள் கதையமுதம் ஆசாரியர். எவற்றைச் செய்தால் கெடுவார்களோ அந்த வழிகளைச் சொல்லிக் கொடுப்பார். அவர்களை மொத்தமாக அழிக்கும் எண்ணம் உடையவர். ஆகவே சுரசைக்கு மாயா ஜாலம் அத்தனையும் சொல்லிக் கொடுத்து, மந்திரோபதேசம் செய்து, அவளுக்கு மாயை என்றும் பெயரிட்டார். உலகத்தில் தவறாகப் புல நடக்கின்றன; போலியாகப் பல நடக்கின்றன. எல்லாவற்றையும் மாயை என்று சொல்வது வழக்கம். மூன்று மலங்களில் ஒன்று மாயை. மாயையை மூன்று வகையாகச் சொல்வார்கள். சுத்த மாயை, அசுத்த மாயை, பிரகிருதி மாயை என்று மூன்று. சுத்த மாயை மகாமூர்த்திகளுக்கு உயர்ந்த தேகத்தை உண்டாக்குவது. அசுத்த மாயை அடுத்த தத்துவங்களை உண்டாக் குவது. பிரகிருதி மாயை ஆன்ம தத்துவங்களுக்குக் காரணமாக இருப்பவை. இந்த மூன்று மாயைகளிலும் மிகப் பெரியது சுத்த மாயை. சைவசித்தாந்தத்தில் சுத்த மாயா புவனம் என்று சொல்லப் படும். அதிலிருந்து நன்மையும் உண்டாகும். சொல்வார்கள். ஆனால் அத்வைதத்தில் மாயையை எப்பொழுதும் பொய் என்று உலகத்தில் நடைபெறுகிற காரியங்கள் அனைத் தையும் அவர்கள் மாயையின் காரியம் என்று சொல்வதனால் அவர்களை மாயாவாதிகள் என்று மற்றவர்கள் சொல்வது வழக்கம். மிகப் பெரிய மாயை ஆகிய சுத்த மாயையைக் களைகின்ற பெரு மான் முருகப்பெருமான் மற்ற மாயைகள் அவனுக்கு எஎம்மரத்திரம்? பிரகிருதி மாயையில் அகப்பட்டிருக்கிற நாம் முருகப் பெருமானை வணங்கினால் அவன் நமக்கு அனுக்கிரகம் செய்வான். இதை அருணகிரிநாதர் ஒரு பாட்டில் சொல்கிறார். மகமா யைகளைந் திடவல் லபிரான் முசுமா றுமொழிந் தும்ஒழித் திலனே. அகமா டைமடந் தையரென் றயரும் சகமா யையுள்நின் றுதயங் குவதே. இங்கே மகமாயை 23 என்பது சுத்த மாயை. சகமாயை என்பது பிரகிருதி மாயை. திருவள்ளுவர், 66 "பொருளல்ல வற்றைப் பொருளென்று உணரும் வ மருளானாம் மாணாப் பிறப்பு"