அசுரர்களின் தோற்றம் 223 என்று சொல்வார். அதுவும் ஒருவகை மாயை. அதை அளித்தை, அஞ்ஞானம் என்று சொல்வார்கள். மருள் என்பது மயக்கம் என்ற பொருளுடையது. உண்மை அல்லாதவற்றை உண்மை என்று நிணைக்கிற நிலை எதுவோ அது அஞ்ஞான நிலை. வீதியில் கிடக்கிற மாலையைப் பார்த்துப் பாம்பு என்று மருள்வதைப் போன்றது அது. மாயையின் சம்பந்தம் எங்கெங்கு உண்டோ அங்கெல்லாம் பல விதமான தோற்றங்கள், தவறுகள் உண்டாகும். மாயையின் சொரூபமாகவே சுரசை இருந்தாள். அசுர சம்பத்து, தேவ சம்பத்து என்று இரண்டு சொல்வது வழக்கம். கண்ணபிரான் கீதையில் அவற்றைப் பற்றிச் சொல்கிறார். மனிதர்களுடைய நல்ல குணங்கள் தேவ சம்பத்து. பொல்லாத குணங்கள் அசுர சம்பத்து. நமக்குள் தேவாசுர யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது. தேவர்களுக்குப் பலம் அதிகமாக வேண்டும். அவர்களுக்குப் பலம் முருகனாகிய தேவசேனாபதியால் உண்டாயிற்று, நம் உள்ளத்திலுள்ள பொல்லாத குணங்கள் போக, எம்பெருமானைத் தியானம் பண்ண வேண்டும். அவனது திருவருள் ஆட்சி ஏற்பட் டால் அசுர சம்பத்துக்கள் அடங்கிவிடும். கந்தபுராணத்தின் ஒட்டு மொத்தமான கருத்து இதுதான். நம்முடைய மனமாகிய யுத்த களத்தில் சூரன் முதலியவர்களைப் போன்ற கெட்ட குணங்கள் எல்லாம், நல்ல குணங்களாகிய தேவர்க ளோடு பொரும். அது காரணமாகத் தேவர்கள் கை தாழும். நல்ல குணங்கள் எல்லாம் அழிந்து போகும். அந்தச் சமயத்தில் இறைவனது திருவருள் கிடைத்தால் அவன் நமக்குத் துணை வருவான். மீண்டும் தேவ குணங்கள் தலைப்படும். அசுரர்கள் அஞ்ஞான சொரூபிகள். அதற்கு மாற்று ஞானம். அசுரர்களால் உண்டாகும் பெரும் பிணியைப் போக்குவதற்கு நம்மால் முடியாது. முருகப் பெருமானை நினைக்க வேண்டும். அவன் வந் தால் நம் பிணி நீங்கும். நீயான ஞான விநோதந்தனை என்று நீ அருள்வாய்" என்று அருணகிரிநாதர் முருகப் பெருமானை வேண்டுகிறார்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/243
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை