பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 மயமானது. கந்தவேள் கதையமுதம் அவன் திருக்கரத்திலுள்ள சிறந்த படையாகிய வேல் ஞான அதனால் அதை ஞானசக்தி என்று சொல்வார்கள். நம் உள்ளத்திலுள்ள அஞ்ஞானத்தை நீக்குவதற்கு அவன் ஞான சக்தியோடு ஞான மூர்த்தியாக வருகிறான். அஞ்ஞானம் எவ்வாறு வருகிறது? அதுதான் மாயையால் உண்டாவது. அகண்டமாயை, கண் மாயை என்று இரண்டு உண்டு. எங்கும் பரந்திருக்கிற மாயை அகண்ட மாயை. ருவர் மனத்திலும் இருக்கிற மாயை கண்ட மாயை. மனத்தை மாயையின் குஞ்சு என்று சொல்லலாம். வனிடத்தில் மாயை வராது. ஒவ்வொ நம்முடைய மனம் அற்ற மாயை நித்தியமானது என்று சைவ சித்தாந்தம் சொல்லும். எது இல்லையோ அது மாயை என்று வேதாந்தம் சொல்லும். எங்கும் இருப்பது மாயை என்றால் இறைவன் திருவருளைப் பெற்றவர்களுக்கு மாயை எப்படி இல்லையாகும் என்று கேள்வி எழ லாம். அவர்கள் அளவில் மாயை இல்லையென்றாலும் உலகத்தில் நிச்சயமாக இருக்கும். எங்கும் மழை பெய்கிறது என்றாலும் குடை உடையவனுக்கு அந்த மழை எவ்விதத் துன்பத்தையும் அளிப்பு தில்லை. அது போல எங்கும் மாயை இருக்கிறது என்றாலும் இறைவன் திருவருளைப் பெற்றவர்களுக்கு அந்த மாயை அடங்கி நிற்கும். இறைவன். திருவருளைப் பெற்றவர்களிடத்தில் மாயை அடங்கி நிற்கும் என்பதுதான் சைவ சித்தாந்தம். மாயை அழிந்தே விடும் என்பது வேதாந்தம். எப்படியோ மாயையினால் உண்டாகின்ற உறைப்பு, அருள் பெற்ற ஆன்மாக்களுக்கு இல்லாமல் போகும் என்பது இரண்டு பேர்களுக்கும் பொதுவான செய்தி. அது வெயிலுக்குப் பாதுகாப்பாகக் குடை பிடிக்கிறோம். குடையைப் பிடித்துக்கொள்வதனால் வெயில் நிற்பதில்லை குடையைப் பிடித்துக் கொண்டிருக்கின்றவன் அளவில் அது உறைப்பதில்லை. போலப் பாசத்தோடு இணைந்திருக்கிற பசு, பதியோடு கலந்தபிறகு அதனிடத்தில் மாயை அடங்கி நிற்கும். பாசத்தினால் உண்டாகின்ற துன்பம் பசுவுக்கு அப்போது கிடையாது.