6 கந்தவேள் கதையமுதம் பேசுகிறார்கள் என்றால் காவிய கர்த்தாக்கள் தம்முடைய காவியங் களில் எவ்வளவு நயமாக மொழியை ஆளுகிறார்கள் என்பதைச் சொல்லவேண்டியதில்லை. ஆகவேதான் காவியங்களைக் காந்தா சம்மிதை என்பார்கள். அடுத்தபடி வருபவை புராணங்கள். புராணங்களைச் கிசு சம்மிதை என்று சொல்வார்கள். குழந்தைகளுக்குக் கதை சொல்வது போலச் சொல்வது புராணம். அதில் தத்துவம் இருக்கும். குழந்தை களுக்குக் கதைகளைச் சொல்லும்போது ஆவலாகக் கேட்பார்கள். அதன் முன்பின் தொடர்ச்சியை கோக்க மாட்டார்கள். அப்போதைக்கு வருகிற சுவையை நினைத்து ஆர்வத்துடன் கேட்பார்கள். அதே போல் வேதத்திலுள்ள கருத்துக்களை எல்லாம் புராணங்கள் கதைகளாகச் சொல்கின்றன. சுருதி, ஸ்மிருதி, காவியம், புராணம் ஆகிய எல்லாமே அடிப்படை உண்மையைச் சொல்வதுதான். வேதமாகிய சுருதியில் உள்ள கருத்துக்களை மற்றவைகள் எல்லாம் தம்முடைய உள்ளுறையாகக் கொண்டு வழங்குகின்றன. ய இந்த நாட்டில்,நம்முடைய பண்பாடு எதுவோ அதை வெளிப் படுத்துவதுதான் இலக்கியம் என்று சொல்வார்கள். அறம் பொருள் இன்பம் வீடு ஆகிய நான்கையும் சொல்வது வேதம். மற்ற நூல்களும் இவற்றைத்தான் சொல்லவேண்டும். அறத்திற்கு மாறுபாடாகக் காப்பியம் சொன்னால் அது காப்பியம் ஆகாது. மனிதனுடைய வாழ்க்கையை உயர்த்துகின்றவைகள்தாம் இலக்கியம். வேதம் மனிதனை இன்னது செய், இன்னது செய்யற்க என்று வரையறுத்துக் காட்டுகிறது. ஆனால் அதைத் தெரிந்துகொள்வது எல்லோராலும் முடியாது. அதனையே வேறு வகையில் சொல்வன ஸ்மிருதி முதலியன. காவியம் என்பது மிகமிகச் சுவையாக, ஊக்கம் குன்றாமல் படிக்கச்செய்து, பின்பு உண்மைக் கருத்தைப் புரிந்து கொள்ளும்படி செய்கிறது. புராணங்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்லும் பாங்கில் அமைந்து வேதத்தின் கருத்தை உள்ளுறையாகக் கொண்டவை. கதையாக இருந்தாலும் கருத்தைச் சொல்வது புராணம். புராணங்கள் புராணம் என்றால் பழமை என்று சொல்வார்கள். வடமொழி யில் அதற்கு அப்படிப் பொருள் சொல்வது இல்லை. புரா என்றால்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/25
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை