அசுரர்களின் தோற்றம் 231 "எனக்குக் காவலாகச் சில பேரை அனுப்புங்கள் என்று சொல் வான். அப்படித்தான் மாணிக்கவாசகர் சொல்கிறார். $5 'உடையாள் உன்றன் மடு இருக்கும்; உடையாள் நடுவில் நீஇருத்தி; அடியேன் நடுவில் இருவிரும் இருத்தி ரானால், அடியேன்உன் அடியார் நடுவில் இருக்கும் அரு ளைப்புரி யாஃப், பொன் அம்பலத்துள் முடியா முதலே என்கருத்து முடியும் வண்ணம் முன்கின்றே." அடியேனுடைய உள்ளத்தில் நீங்கள் இருக்கவேண்டுமானால் நான் அடியார்களுக்கு நடுவில் இருக்கிற அருளைச் செய்வாயாக" என்கிறார். மிக அருமையான பொருளாக இருந்தாலும் அதற்குரிய பாதுகாப்பு இல்லாமல் வைத்துக்கொண்டால் பொருளை இழந்துவிடும்படி நேரும். இந்தக் கருத்தில் அப்படிச் சொன்னார். சத் சங்கத்தினால் நமக்கு இருக்கிற நல்ல குணங்கள் வளரும். தாழ்ந்தவர்களுடன் சேர்ந்து விட்டால் நல்ல குணங்கள் அடியோடு அழிந்து, மெல்ல மெல்ல மிகத் தாழ்ந்த நிலையே உண்டாகிவிடும். இதைத்தான் காசியபர் வரலாறு நமக்குக் காட்டுகிறது.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/251
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை