234 கந்தவேள் கதையமுதம் யாகம், தவம் என்பன இரண்டு வகைப்படும். ஒரு பொருளை விரும்பிச் செய்கிற யாகம், தவம் ஆகியவை காமிய கர்மாக்கள்; அல்லாதவை நிஷ்காமிய கர்மார்கள். காம்ய கர்மாக்களினால் மேலும் மேலும் பிறப்பும், துன்பமும் வருமேயன்றி இறைவன் திருவருள் கிடைக்காது. சுக்கிராசாரியாரி காம்ய கர்மங்களைச் செய்ய வேண்டுமென்று அசுரர்களுக்கு உபதேசித்தார். அப்போது மாயை, "யாகத்திற்கு வேண்டிய பொருள்களை நான் தருகிறேன் என்று சொன்னாள். சூரபன்மன் வேள்வி புரிதல் 39 சுக்கிராசாரியாருடைய உபதேசப்படி சூரபன்மன் யாகம் செய்யப் போனான். நூறு யோசனைப் பரப்பில் பெரிய வேள்விக் களத்தை உண்டாக்கி, தம்பிமார்களை வேள்வி செய்யச் சொல்லி அவன் தவம் செய்தான். செடுங்காலம் தவம் செய்தும் ஆண்டவன் வரவில்லை. அதற்கு மேல் ஆகாயத்தில் போய்த் தன் உடம்புத் தசைகளையே அறுத்து அவற்றை ஆகுதியாக வேள்வித் தீயில் போட்டான். கிறார். தவத்தின் இயல்பு தவம் என்பது எத்தகையது என்று திருவள்ளுவர் சொல் C உற்றநோய் நோன்றல், உயிர்க்குறுகண் செய்யாமை அற்றே தவத்திற் குரு 77 என்பது அவர் கூறும் இலக்கணம். தவம் என்ற சொல் தபஸ் என்ற வடமொழிச் சொல்லிலிருந்து வந்தது. தப் என்பது வேர். தப் என்றால் எரித்தல். தன்னைத் தானே எரித்துக்கொள்வதுதான் தவம். அதாவது பட்டினி கிடத்தல்,நெருப்பின் வெம்மையைத் தாங்குதல், குளிரைத் தாங்குதல் முதலிய தன்பங்களைத் தானே ஏற்றுக்கொண்டு மனத்தை ஒருமுகப்படுத்தி இறைவனை நினைப்பது தவம். இதைத்தான் ' உற்ற நோய் நோன்றல்' என்று சொன்னார். அதோடு தவத்தின் இலக்கணம் நின்றுவிடவில்லை. அதற்கு மேலே முக்கியமாக ஒன்று இருக்கிறது. எல்லாத் துன்பங்களையும் ஏற்றுக்கொண்டால் போதாது. பிறருக்கு எந்த விதமான துன்பமும் செய்யாமல் இருப்பது தவத்தின் மற்றோர் இலக்கணம்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/254
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை