சூரபன்மன் ஆட்சி 237 தன் அண்ணன் வச்சிரக்கம்பத்தில் வீழ்ந்து பொடியானதைக் கண்டான் சிங்கமுகாசுரன். மனம் வருத்தமுற்றான். பல வகை யாகப் புலம்பினான். தாரகனும் அப்படியே வருந்தினான். இரண்டு பேரும், நம் அண்ணன் மறைந்துபோன பிறகு நாம் உயிரோடு இருத்தல் கூடாது' என்று எண்ணினார்கள். 3 அன்ன திறல்அவுணன் ஆயிரமென் றுள்ளஅகன் சென்னிபல வந்தனது செங்கைவா ளால்ஈர்ந்து முன்னம் முதல்வன் மூயன்ற பெருவேள்வி வன்னி அதனுள் மறம்பேசி இட்டனனே. [அவுணன் { அசுரர் யாகப். 111.) சிங்கமுகாசுரன். முதல்வன் - தமையனகிய சூரன். வன்னி- வேள்வித் தீ. மரம் - வீரம்.) சிங்க முகன் தன் ஆயிரம் தலைகளையும் வெட்டி, சூரன் யாக குண்டத்தில் எங்கு வீழ்ந்தானே அந்த அக்கினியிலேயே வீசினான். சிங்கமுகன் செய்ததைத் தானும் செய்யவேண்டுமென்று தாரகனும் தன் தலைகளை வெட்டி வேள்ளித் தீயில் இட்டனன். அவர்கள் தலைகள் வெட்ட வெட்ட முளைத்துக் கொண்டிருந்தன. 'நாம் இப்படி வாளால் சிரத்தை வெட்டிப் பயன் இல்லை. அண்ணன் உயிர் விட்டதைப்போல உயிர்விடவேண்டும்' என்று எண்ணினார்கள். இருவரும் வச்சிரக்கம்பத்தில் ஏறிக் குதித்தார்கள். 56 சிவபெருமான் அருள் புரிதல் அப்போது சிவபெருமான் அவர்களுக்கு அனுக்கிரகம் பண்ண வேண்டுமென்று எண்ணினான். ஒரு கீழ அந்தணராக வந்து, 'ஏன் ஐயா, இப்படிப் பண்ணுகிறீர்கள்?" என்று கேட்டான். அண்ணன் தவம் பண்ணி இறந்துவிட்டான். அண்ணன் இல்லா விட்டால் எங்களுக்கு வாழ்வு இல்லை. ஆகவே நாங்களும் இறக்கத் துணிந்தோம்" என்றார்கள். அப்போது இறைவன் கங்கையை அழைக்க, அந்த நதி வந்து புகவே, வேள்வி அக்கினி அவிந்து போயிற்று. அசுரர் யாவரும் எழுந்து வந்தார்கள். அரந்தைதனை இகந்தஇரு துணைவர்களும் பாங்கருற அவுணர் சேை பரந்துபல வாழ்ந்தெடுப்பச் சூரபன்மன் திகழ்வேலை, படியும் வானும் நிரந்தயனற் கங்கைதனை வருவித்து மறையவன்கோல் நின்ற எம்மான் கரந்துதனை உணர்கின்ற உருவினொடு தோன்றினனால் ககன மீதே. [அரந்தைதனை - துயரத்தை. இகந்த - நீங்கீய. (வரம்பெறு. 10.) திகழ் வேலை - விளங்கும் சமயத்தில். டியும் - பூமியும். நிரந்த - நிரம்பிய, ககனம் - வானம்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/257
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை