பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை q பழமை; ந என்றால் புதுமை; பழமையும், புதுமையும் சேர்ந்தது புராணம் : புரா, ந இரண்டும் சேர்ந்து புராணம் ஆயின. ரகரம் வந்தால் ந, ண வாக மாறும். நடந்த காலத்தால் பழமையானது. ஆனால் இன்றைக்கும் அது பயன் தருவதால் புதுமையானது. பழங் காலத்தில் நிகழ்ந்த கதையைச் சொன்னாலும், அதிலிருந்து நாம் அறியவேண்டிய கருத்தைப் புலப்படுத்துவதால் இன்றும் பயன் தருகிறது; ஆதலால் புதுமையாகவும் உள்ளது. நாம் பல சரித்திரங்களைப் படிக்கிறோம். சரித்திரங்கள் அரசர் களுடைய தோற்றத்தையும், வெற்றி தோல்வியையும் சொல்பவை. அவைகளை எல்லாம் செய்தி அளவுக்குத் தெரிந்துகொள்கிறோம். நம் நாட்டு மன்னர்கள் இப்படி எல்லாம் செய்தார்கள் என்று பெருமைப்படுகிறோம். அவ்வளவுதான். ஆனால் புராணமோ முன்னே அப்படி நடந்தது, நாமும் அப்படி நடந்தால் நல்லதைப் பெறலாம் என்று அறிவுறுத்துகிறது. ஆகவே, நடந்ததனால் பழமை யுடையதாக இருந்தாலும், இப்போதும் நாம் பயன் அடைவதற்கு உரியதாக இருப்பதால் புதுமை உள்ளதாக இருக்கிறது. இப்படி பழமையும் புதுமையும் கலந்ததுதான் புராணம். ஆகவே இந்த நாட்டில் பல்காலகப் புராணங்களை மக்கள் மிகவும் விருப்பத்துடன் கேட்டுவருகிறார்கள். பெரியவர்கள் புராணத்தைப் போற்றி வருகிறார்கள். க வேதம் சத்தியத்தையே சொல்லவேண்டும் என்று நீதியாகச் சொல்லும். அதை இன்னபடி சொல்லவேண்டுமென்று ஸ்மிருதி சொல்லும். அந்தச் சத்தியத்தையே கருவாக்கி அரிச்சந்திரனுடைய கதையைக் காவியமாகப் படைப்பார்கள் கவிஞர்கள். வேதத்திலுள்ள நீதியை அப்படியே சொன்னால் மனிதன் கேட்கமாட்டான். உனக்குச் சர்க்கரை அதிகமாகச் சேரவேண்டும்" என்று ஒரு வைத்தியர் சொல்கிறார். உடனே கடைக்குப் போய்ச் சர்க்கரையை வாங்கி அப்படியே யாரும் சாப்பிடமாட்டார்கள். சாப்பிட்டாலும் தெவிட்டிவிடும். அதற்காக மா முதலிய பண்டங்களை வாங்கி, சர்க்கரையையும் சேர்த்துப் பலவகைப் பணியாரங்களாக ஆக்கி உண்பார்கள். சர்க்கரை எப்படியோ உள்ளே போய்ச் சேர்ந்துவிடும். புராணங்கள் தின்பண்டங்களைப்போல உள்ளவை.