244 கந்தவேள் கதையமுதம் தடக்கடலின் வேலைதனில் வருணர்பிரான் ஒல்லைதனில் தந்த மீனத்து அடுக்கல்முழு வதும்நோக்கிக் கடவுளரை விளித்திவற்றை ஆற்றலாலே எடுப்பதுநும் தொழிலென்றே இந்திரன்ருன் விளம்புதலும் இமையோர் எல்லாம் நடுக்கமுடன் உளம்பதைப்ப விழிபனிப்பக் கரம்குலைத்து நாணுக் கொண்டார். [வேலைதனில் - கரையில். (தேவரை ஏவல் கொள்..) ஒல்லைதனில் - விரைவில். மினத்து அடுக்கள் மீன் குவியலாகிய மலை. கடவுளரை தேவர்களை விழி பணிப்ப கண்ணில் நீர் ததும்ப.] இந்திரன் முதலிய தேவர்கள் தங்களுக்கு உண்டான இழி நிலைக்கு மிகவும் வருந்தினார்கள். 'கெடு மதியுடைய சூரனுடைய செயலால் நாம் துயர்க்கடலில் ஆழும்படி ஆகிவிட்டதே! வரங்கள் எல்லாம் போய்விட்டனவே ! இன்னும் என்ன என்ன விதத்தில் தப்பான காரியங்கள் செய்ய வேண்டி வருமோ ?' என்று நினைந்து வருந்தினார்கள். 'உலகம் பழிக்கின்ற காரியங்களைச் செய்து. கொண்டிருக்கிறோம்' என்று அவர்கள் தங்கள் நிலையை எண்ணி எண்ணி உருகினார்கள். பானுகோபன் செயல் அப்போது சூரபுன்மனுக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தை தொட்டிலில் தூங்கும்போது சாளரத்தின் வழியே சூரியனின் கதிர் வந்து கொஞ்சம் சுட்டது. உடனே அந்தக் குழந்தை ஒரு தாவுத் தாவிச் சூரியனைப் பற்றிக் கொண்டு வந்து தன்னுடைய தொட்டிலில் ஒரு குஞ்சத்தைப்போலக் கட்டிவிட்டது. பார்த்திடு கின்ற மைந்தன் பன்மணித் தொட்டில் நின்றும் சீர்த்தெழுந் தண்டம் பாய்ந்து செங்கதிர்ச் செல்வற் பற்றிக் கார்த்திடு புயங்கம் கவ்வும் படித்தெனக் கரத்திற் கொண்டு பேர்த்துமோர் இறையில் வந்தான்; தவத்தினும் பெரிதொன் றுண்டோ? [அண்டம் - வானத்தில். யில் - கணத்தில்) (புதல்வரைப்பேறு. 5.) இறை கார்த்திடு புயங்கம் - கரிம நிறமுடைய ராகு.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/264
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை