246 கந்தவேள் கதையமுதம் பின்னால் கொடுத்தது பரிசு. பிரமனும் சூரியனும் விடைபெற்றுச் சென்றார்கள். தன் பிள்ளையின் ஆற்றலைக் கண்டு மகிழ்ந்து, சூரபன் மன் அப்போதுதான் அவனுக்குப் பானுகோபன் என்ற பெயரை வைத்தான். விளக்கை அணைக்கிறவன் என்று சொல்கிறமாதிரி அந்தப் பெயர் இருக்கிறது. பிள்ளைகள் பிறத்தல் அதன் பிறகு அங்கிமாமுகன், இரணியன், வச்சிரவாகு ஆகிய வர்களைப் பதுமகோமளை ஈன்றாள். மற்றத் தேவிமார்கள் மூவாயிரம் பேர்களைப் பெற்றார்கள். சிங்கமுகனுக்குப் பட்டத்துத் தேவி மூலம் அதிசூரன் என்ற மகன் ஒருவன் பிறந்தான். மற்றத் தேவிமார்கள் நூற்றுக்கணக்கான அசுரர்களைப் பெற்றார்கள். தாரகனுக்கு அசுரேந்திரன் என்கிற மகன் பிறந்தான். வில்வலன் வாதாபி வேள்வி செய்தல் அசமுகி தவம் செய்து கொண்டிருந்த துர்வாசரை அணுகி, அவர் மனம் பேதலிக்கும்படி செய்து, அவர் மூலமாக இரண்டு குழந் தைகளைப் பெற்றுக்கொண்டாள். அவர்களுக்கு வில்வலன், வாதாபி என்று பெயர். தந்தையைப் போன்ற உருவம் உடையவன் வில்வலன். தாயைப் போல ஆட்டுமுக முடையவன் வாதாபி. இந்த இரண்டு பேர்களும் தம்முடைய தந்தையாரை அணுகி, உம்முடைய தவம் முழுவதையும் எங்களுக்குத் தரவேண்டும்' என்று கேட்டார்கள். அவர் அதைத் தர முடியாது என்றவுடன் தம் தந்தை துர்வாசரையே கொல்வதற்குப் போனார்கள். அதைக் கண்டு கோபித்த துர்வாசர், "உங்களை அகத்திய முனிவர் வந்து அழிப்பார்" என்று சாபமிட்டுப் போய்விட்டார். வில்வலன், வாதாபிக்குத் தம் தந்தையாகிய முனிவரிடம் கோபம் வந்தது.'எல்லா முனிவர்களையும் அழிக்க வேண்டும்; அதற்குரிய பலம் பெற யாகம் செய்யவேண்டும்' என்று நினைந்து, அவர்கள் இரு வரும் பிரமதேவனைக் குறித்து யாகம் செய்ய ஆரம்பித்தார்கள். தம் தகப்பனார் சொல்லித் தந்த மந்திரத்தின்படி வில்வலனும், வாதாபி
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/266
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை