சூரபன்மன் ஆட்சி 247 யும் தங்கள் உடம்புச் சதைகளை வெட்டிப்போட்டு, இரத்தத்தை நெய்யாகச் சொரிந்து வேள்வி செய்தார்கள். $6 வில்வலன் தன் தம்பியாகிய வாதாபியையே வெட்டி வெட்டி வேள்வித் தீயில் போட்டுக் கடுமையான தவம் செய்யலானான். அந்தச் சமயத்தில் பிரமன் அங்கு வந்து, உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டான். "இந்த நெருப்பில் அவிசாக விழுந்து மாண்டுபோன என் தம்பி உயிரோடு வரவேண்டும்" என்று வில்வலன் வரம் கேட்டான். "அப்படியே உயிர் பிழைப்பான்" என்று பிரம தேவன் சொன்னவுடன், வாதாபி அக்கினி குண்டத்தி லிருந்து பழைய வடிவை எடுத்துக்கொண்டு வந்தான். அப்போது வில்வலன் மற்றொரு வரத்தைக் கேட்டான்; "என்னுடைய தம்பி யாகிய வாதாபியை நான் எத்தனை முறை வெட்டி, உருமாற்றி னாலும்,வாதாபி வா என்றால் பழைய வடிவோடு அவன் வருவதற்கு வரம் தர வேண்டும்" என்றான். பிரமனும் அந்த வரத்தைக் கொடுத்துவிட்டுப் போய்விட்டான். " வில்வலன் வாதாபியர் செயல் பிறகு அந்த இருவரும் குடகு ராஜ்யத்தில் நான்கு சந்திகள் சேரும் இடத்தில் பெரிய ஆசிரமம் ஒன்றை நிறுவினார்கள். வில்வலன் பெரிய முனிவர் மாதிரி இருப்பான். வாதாபி ஆடாகச் சென்று மேய்ந்து கொண்டிருப்பான். யாராவது முனிவர் அந்த வழியே வந் தால், "என்னுடைய ஆசிரமத்திற்கு வந்து விருந்து அருந்த வேண்டும்" என்று வில்வலன் உபசரிப்பான். அவர்கள் வந்தால் அர்க்கிய பாத்தியம் கொடுத்து வரவேற்று, தன் தம்பியாகிய ஆட்டை அறுத்துச் சமைத்து அவர்களுக்கு உணவு வழங்குவான். அவர்கள் உண்ட பிறகு, "வாதாபியே வருக " என்பான். வாதாபி முனிவருடைய வயிற்றைக் கீறிக்கொண்டு வெளியே வந்துவிடுவான், பழைய வடிவத்தோடு. முனிவர் இறந்து போவார். இப்படி எத்தனையோ முனிவர்கள் செத்துப் போனார்கள். முனிவர்களுக்குத் துன்பம் செய்ய வேண்டுமென்று கங்கணம் கட்டிக் கொண்டே இந்தக் காரியத்தைச் செய்து வந்தார்கள். இதனால் அவர்களுக்கு எத்தகைய லாபமும் இல்லை. இப்படிப் பிறருக்கு உண்டாகும் துன்பத்தைக் கண்டு மகிழ்ச்சி கொள்வதுதான் அசுரத்தனம்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/267
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை