பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254. கந்தவேள் கதையமுதம் நர்மதை, சிந்து, சரஸ்வதி, காவேரி கான்பன அந்த ஏழு புண்ணிய நதிகள். கங்கைக்குச் சமானமானது காவேரி. ஆழ்வார்கள் காவேரியைக் கங்கையைவிடப் புனிதமானது என்று சொல்வார்கள். கங்கையிற் புனித மாய காவிரி" it (திருமாலை) காவேரி ஆற்றின் இரு கரையிலும் திருமாலுக்கும், சிவபெருமானுக் கும் பல கோயில்கள் இருக்கின்றன. ஆதலின் அது மிகச் சிறந்த நதி. காவேரியைச் சிவபெருமான் நினைத்தவுடன் அவள் வந்தாள். "நீ அகத்தியருடன் போ "என்று சிவபெருமான் பணித்தான். காவேரி ஒரு பெண் அல்லவா ? "முனிவராகிய ஆடவரோடு நான் எப்படிப் போவேன்?" என்று கேட்டாள். பெண்கள் மற்ற ஆடவர் களுடன் தனியாகப் போவதற்கு நாணுவார்கள். அது அந்தக் காலத்து இயல்பு. "இவனை மற்ற ஆண்கள் மாதிரி நினைக்காதே. பெண், பொன், மண் ஆகிய ஆசைகளை அடக்கினவன் இவன்; இந் திரிய நிக்கிரகம் பண்ணினவன்; மிக உயர்ந்தவன். இவனுடன் போவதால் எந்த விதமான பழியும் உண்டாகாது" என்று இறை வன் சொன்னான். . " "எவ்வளவு காலம் இவனுடன் போவது ? " என்று காவேரி கேட்க, இறைவன், "சரியான ஐயந்தான் கேட்கிறாய் என்று மகிழ்ந்தான்; " என்றைக்கு இவன் போ என்று சொல்வது போலக் கையைக் காட்டுகிறானோ, அப்போது நீ இவனை விட்டுப் பிரிந்து போகலாம்" என்று சிவபெருமான் கூறினான். நன்று நன்றிது, நங்கைநின் காரணத் தென்று நோக்கி இவன்கரம் காட்டுவன்; அன்று நீங்கி அவனியின் பாலதாய்ச் சென்று வைகெனச் செப்பிளன் எந்தையே. [நின் காரணத்து உன்னுடைய காரணத்தினாள். பூமியிலிருக்கும் கதியாய். வைகு தங்கு] - (அகத்தியப்.24.) அவனியில் பாலதாய் - அகத்திய முனிவர் காவேரியைத் தம் கமண்டலத்தில் வாங்கிக் கொண்டார்; தென்திசை நோக்கி நடந்தார். கிரௌஞ்சத்தைச் சபித்தல் அகத்தியர் போகும் வழியில் கிரௌஞ்ச மலை இருந்தது. அந்த மலைக்குரிய தாரகன் அகத்தியருக்குத் தொல்லை கொடுக்க