256 கந்தவேள் கதையமுதம் பெறாத வெய்யோய்' என்றார். அவனிடம் மதி இருக்கிறது. ஆனால் அது மாட்சி பெறவில்லை. அகத்தியர் அவனுக்குச் சாபமிட்டார். "இங்கேயே மலையாகத் தங்குவாய். அசுரர்களுக்கு இருப்பிட மாக விளங்குவாய். தேவர்களுக்கும், மக்களுக்கும் மேலும் மேலும் துன்பம் கொடுத்துக்கொண் டிருப்பாய். பிறகு முருகன் வந்து உன்னைச் சங்காரம் செய்வான்" என்று சொன்னார். தண்டிக்காமல் ஏன் அப்படிச் சொன்னார் என்று தோன்றும். நாம் நம்முடைய சுத்த மான ஆடையில் சிறிது அழுக்குப்பட்டாலும் உடனே கழுவுவோம். அழுக்குத் துணியாக இருந்தால், 'மேலும் மேலும் அழுக்குச் சேரட்டும்; ஒரேயடியாகச் சலவைக்குப் போட்டுக் கொள்ளலாம்' என்று நினைப்போம். அது போல் கிரௌஞ்சாசுரனின் பாவம் அதிகமாக அதிகமாகக் கடைசியில் ஆண்டவனது தண்டனை அவனுக்குக் கிடைக்கும். அதனால் இப்படிச் சொன்னார். மாற்படு நமது பாணி வலிகெழு தண்டால் உன்றன் பாற்படு புழைகள் யாவும் பற்பல மாயைக் கெல்லாம் ஏற்புடை இருக்கை யாக; எம்பிரான் உதவும் செவ்வேள் வேற்படை தன்னிற் பின்னாள் விளிகுதி விரைவின் என்றான். (கிரவுஞ்சப்.12) [மால்படு பெருமை பெந்த. பாணி-நையிலுள்ள. விளிகுதி - அறிவாய்.] இவ்வாறு கிரௌஞ்சத்திற்குக் சாபம் புழைகள் - துவாரங்கள். கொடுத்துவிட்டு, அகத்திய முனிவர் மீண்டும் தெற்கே போனார். உயர்ந்து நின்ற விந்திய மலையைப் பார்த்து, 'வழிவிடு" என்று சொன்னார். அதைக் கேட்ட விந்தியமலை, "சந்திரனுக்கும், சூரியனுக்குமே இடம் கொடுக் காமல் நான் உயர்ந்திருக்கிறேன். திருமால் உயர்ந்ததுபோல் நான் இப்போது ஓங்கியிருக்கிறேன். மிகவும் குட்டையான உனக்குப் பயந்து வழிவிடவாவது? என் பெருமையை நீ அறியாய் போலும் ! வந்த வழியே திரும்பிப் போ" என்று அகங்காரத்தால் சொல்லியது. "நான் யாருக்கும் பயப்படவில்லை. சின்னஞ்சிறு வடிவத் தோடு இருக்கும் உனக்கா பயப்படுவேன்? அவர்கள் எல்லாம் எங்கெங்கோ சுற்றிப் போகிறார்கள். நீ என்னையா, பெரியவன்? திரும்பிப் போ " என்று அது கூறியது.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/276
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை