ரகத்தியர் அருஞ்செயல்கள் 257 அப்போது அகத்திய முனிவர் சிவபெருமானைத் தியானித்தார். வரும்போது சிவபெருமானிடம் வரம் வாங்கி வந்தவர் அவர். சிவபெரு மானைத் தியானித்தவுடன் அகத்தியருடைய கை கிடுகிடு என்று வளர்ந்தது. அவர் உருவம் சிறியதாக இருந்தாலும் மனம் பெரியது. வரமும் பெரியது. இறைவனது வரத்தைப் பெற்றவர் அல்லவா அவர்? ஆகவே அவர் கை மிக மிக நீண்டு விந்திய மலையின் முடியைப் பற்றி ஓர் அமுக்கு அமுக்கிற்று. விந்தியமலை கூனிக் குறுகிப் தாளத்திற்குப் போய்விட்டது. பா அற்புதம் அமரர் கொள்ள ஆற்றவும் குறியோன் விந்த வெற்பின தும்பூர் தன்னில் மீயுயர் குடங்கை சேர்த்தி வற்புற ஊன்ற வல்லே மற்றது புவிக்கண் தாழ்ந்து சொற்சிலம் புகுந்துசேடன் தொன்னிலை அடைந்த தன்றே. (விந்தம் பிலம்புகு. 7.) (ஆற்றவும் - மிகவும். உம்பர் - மேலே,நீ உயர் குடங்கை - மேலே உயர்ந்த உள்ளங்கையை. வற்புற - வலிமை பெற; அழுத்தமாகவல்லே - விரைவில் சேடன் தொல் நிலை - ஆதிசேடன் உள்ள பழைய டமாகிய பாதாளம்.) விந்தியமலை பூமிக்குள் அழுந்தியதோடு பாதாளத்திற்கே போய்ச் சேர்ந்துவிட்டது. அப்போது அகந்தை குன்றி, அவமானமுற்ற விந்தியம், முனிவரை வணங்கி, எனக்கு எப்போது விடிவு உண்டாகும்?" என்று கேட்க, "நான் மறுபடியும் இந்த வழியே திரும்பும்போது எழு" என்று சொல்லிப் போனார். ஆனால் அகத்தியர் திரும்பி வரவேயில்லை. வில்வலன் வாதாபி வதை பிறகு தெற்குநோக்கி அகத்தியர் வந்து கொண்டிருந்தபோது குடகுக்கு வந்தார். அங்கேதான் வில்வலன், வாதாபி ஆசிரமம் இருந்தது. அந்த இடத்தில் இருந்துகொண்டு அவர்கள் செய்து வந்த மாயத்தை முன்பே பார்த்தோம். மற்ற முனிவர்களைப்போலவே அகத்தியரையும் எண்ணி வில்வலன் அவரை விருந்துக்கு அழைத்தான். 'தாங்கள் என்னுடைய ஆசிரமத்திற்கு வருவதற்கு ளன் என்ன தவம் செய்தேன் !" என்று உபசாரம் செய்தான். 33
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/277
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை