பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் அருஞ்செயல்கள் 259 அகத்தியர் உண்மையை உணர்ந்தார்; அசுரர்கள் செய்கின்ற சூழ்ச்சி என்பதைத் தெரிந்துகொண்டார்; உடனே வயிற்றைத் தடவிக் கொண்டு, "வாதாபி ஸ்வாஹா !" என்று சொன்னார். வாதாபி அவர் வயிற்றுக்குள் சங்காரம் ஆகிவிட்டான். மேகம் போன்றிருந்த வில்வலன், தம்பி இறந்துவிட்டதை அறிந்து ஒரு தண்டத்தை எடுத்துக்கொண்டு அகத்திய முனிவரிடம் சண்டை யிட வந்தான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று சொல் வார்கள். அகத்தியர் ஒரு புல்லை எடுத்து வில்வலன்மேல் ஏவினார். அந்தப் புல் வில்வலனை அடியோடு அழித்துச் சங்காரம் பண்ணி விட்டது. மெய்க்கொண்ட தொன்னாள் உருக்கொண்டு முனிதன்னை வெகுளுற்றொர் தண்டமதனைக் கைக்கொண்டு கொலை உன்னி வருபோழ்தில் முனிவன் கரத்தில் தருப்பைஒன்றை மைக்கண்டர் படையாக நினைகுற்று விடவில் வலன்றலும் மடிவெய்தலும் அக்கண்ட கக்கள்வர் உறையுற்ற இடம்நீங்கி அப்பால் ஆசுன்றனனரோ. (வில்வலன் வாதாவி வதைப்.32.) அசுர உருவை [தொன்னான் உருக்கொண்டு - பழைய காலத்தில் உள்ள மேற்கொண்டு.வெகுளுற்று - கோபித்து. மைக்கண்டர் படையாக - பாசுபதாஸ்திர மாக. கண்டகக்கரவர் - முள்ளைப் போன்ற கொடிய வஞ்சகர்கள்.] இப்படி வில்வலன், வாதாபி இரண்டு பேரையும் அழித்த பிறகு அகத்தியர் மீட்டும் தென்னாடு நோக்கி நடந்தார். வில்வலன், வாதாபியின் பிரம்மகத்தி தம்மைத் தொடர்ந்தது கண்டு அவர் சிவலிங்கத்தை நிறுவிப் பூஜை பண்ணினார். அதனால் பிரம்மகத்தி நீங்கியது. காவிரி படர்தல் அந்தக் காலத்தில் நாரதர் இந்திரனிடம் போனார். அவன் அவரிடம் நந்தவனம் வாடிவிட்டதைச் சொன்னான். "காவேரி வந்தால் உன் குறை தீரும். நீ விநாயகப் பெருமானைப் பூஜை செய்' என்று சொல்லிப் போனார். அவனும் விநாயகரைப் பூஜை செய்யு அந்தப் பெருமாள் எழுந்தருளி, உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்டார்.