அகத்தியர் அருஞ்செயல்கள் ஒல்லாத கண்டிகையும் நீறும்அணிந் தனை ; அதனால் உலகில் தேவர் எல்லாரும் அறியஐயம் ஏற்றேனுக் கூடியவன்நீ; ஈண்டு செல்லச் 263 செல்லாது; கைத்தலத்தில் ஒருகோலும் கொண்டனையால்; சிறியை போலும்! நில்லாய்,எம் பெருமான்றன் மாநகரம் அணுகாது நீங்கு கென்றார். (திருக்குற்றாலம்.5) [ஒல்லத -ஆகாத, கண்டிகை - ருத்திராட்சம். ஐயம் ஏற்றேனுக்கு - பிச்சை வாங்கும் சிவனுக்கு. செல்லச்செல்லாது வரக்கூடாது. மாககரம் - பெரிய கோயில்.] '"ஏய்! நாங்கள் சகிக்க முடியாதருத்திராட்சத்தையும், திருநீற்றையும் பூண்டுகொண்டா வந்தாய்? தேவர்கள் எல்லாம் கண்டு சிரிக்கும்படி யாகப் பிச்சை வாங்கித் திரிகிற ஒருவனுக்கு அடிமை நீ. இங்கே நீ வரக்கூடாது. உன் கையில் ஒற்றைத் தண்டு வேறு கொண்டிருக் கிறாய். இங்கிருந்து நீ போய்விடு" என்று அகத்தியரைப் பார்த்து வெருட்டினார்கள். அகத்தியர் அணிந்திருந்த மங்கலமாகிய சின் னங்களைக் கண்டு அவர்கள் வெறுத்தார்கள். திருநீறும் உருத்திராட்சமும் திருநீற்றைக் கண்டு வெறுக்கின்ற அவர்களை என்ன என்று சொல்வது? இந்த உலகக்தில் கடைசியாக நிற்பது நீறு ஒன்றுதான், எல்லாவற்றையும் எரித்தால் கரியாகும். அதையும் எரித்தால் நீறாகி விடும்.நீற்றை எத்தனை முறை எரித்தாலும் அது மாறாது. உலகத்தி லுள்ள எல்லாம் அழிந்தாலும் தான் அழியாமல் இருக்கும் சிவபெரு மானைப் போல இருப்பது நீறு. திருநீற்றுக்குத் தனியே உபநிடதம் இருக்கிறது. ருத்திராட்சம் இறைவனுடைய கண்களிலிருந்து தோன்றியது. ஆகையால் ருத்திராட்சம் என்ற பெயர் பெற்றது. சிவபெருமான் உயிர்க்கூட்டங்கள் படுகிற துன்பத்தைக் கண்டு கண்ணீர் வடித் தான். அந்தக் கண்ணீர்த்துளிகளே ருத்திராட்சம் ஆயின. ருத்திராட் த்திற்கு ஒரு பெருமை உண்டு என்று காமகோடி பீடாதிபதிகள் 'ரால்வார்கள். மனிதன் தாமரை மணியையும், ஸ்படிக மணியையும் ரிந்துகொள்கிறான். அவற்றுக்கெல்லாம் தனியாக ஓட்டை போட்டு விழுங்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/283
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை