பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 கந்தவேள் கதையமுதம் திருமாலை வணங்குவது தவறு அன்று. அங்கிருந்த வைணவர் கள் திருமாலை வணங்குவதைவிடச் சிவனையும், சைவர்களையும் வெறுப்பதையே தம் வேலையாகக் கொண்டிருந்தார்கள். ஞானசம்பந்தப் பெருமான் சமணர்களோடு, அவர்கள் சமணர் களாக இருந்தார்கள் என்ப பதற்காக வாதாடவில்லை. அவர்கள் சைவர்களுக்குத் தீங்கு செய்தார்கள்; சிவத்துவேஷமான காரியம் களைச் செய்தார்கள். அதற்காகவே அவர்களோடு வாதிட்டார். ஒரு சமயத்துறையில் புகுந்தவன் முதலில் மனிதனாக இருக்க வேண்டும்; மனிதப் பண்பாட்டோடு இருக்க வேண்டும். மனிதப்பண்பு இல்லாத வர்கள் எந்தக் கடவுளை வணங்கினாலும் அவர்களுக்கு அருள் கிடைக்காது. ஆகவே, திருமாலை வணங்கி இங்கே இருந்தவர்கள் சிவனை வெறுத்தார்கள்; சிவன் அடியார்களை வெறுத்தார்கள். ஆகையால் அவர்களுக்குப் புத்தி புகட்டவேண்டுமென்று அகத்தியர் வந்தார். அகத்தியர் கோவிலுக்குள் போய் அங்கே திருமாலாக இருந்த மூர்த்தியை வழிபடத் தொடங்கினார். சந்திரசேகரனை மனத்தில் திருமாலினுடைய வடிவத்தின்மேலே கையை நீட்டி, குறுகு, குறுகு" என்று சொல்லி அந்த மூர்த்தியைக் குழைவித்துச் சிவலிங்க வடிவம் கொள்ளும்படி செய்துவிட்டார். கொண்டு அறுகுமதி ததியுனையும் செஞ்சடைஎம் பெருமானை அகத்துட் கொண்டு சிறுகும்உரு வுடையமுனி நாரணனார் திருமுடிமேல் செங்கை ஓச்சிக் குறுகுகுறு கென இருத்தி ஒள்ளாக்கிற் புனைமாவைக் கோல மீது மறுகுதழல் உற்றென்னக் குழைவித்தோர் சிவலிங்க வடிவம் செய்தான். (திருக்குற்றாலம்.15.) (ஓச்சி -நீட்டி. பாவைக் கோலம் - பொம்மை வடிவம்,] இதனால், குறுகு குறுகு குற்றாலம்' என்ற பழமொழி வழங்கு கிறது. அரக்கினால் ஆகிய பொம்மையின்மேல் நெருப்பை வைத்தால் அது எப்படி உருகி மொத்தையாக ஆகுமோ அப்படித் திருமாலின் வடிவம் குழைந்து சிவலிங்கவடிவம் ஆகிவிட்டதாம். உருவம் ஆக நின்ற திருமால் இப்போது அருவுருவம் ஆகிய சிவலிங்கம் ஆகிவிட்டார்.