பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/287

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகத்தியர் அருஞ்செயல்கள் 267 அசுரர்களுடைய அவதாரங்களை எல்லாம் சொல்லிவந்த கச்சியப்பர் அகத்திய முனிவருடைய வரலாற்றை இப்படி விரிவாகச் சொல்கிறார். காணத் தகாத பொருளைக் கண்டால் அதற்குப் பரிகார மாகக் கொஞ்சம் அழகான பொருள்களைக் காணுவது வழக்கம். அதுபோல, பாதகர்களாகிய அசுரர் கதைகளைச் சொல்லவந்த கச்சியப்பர் இடையே இப்படிச் சொல்கிறார். கம்பராமாயணத்தில் உத்தரகாண்டம் இல்லை. இராமாயணத்தில் ஏழாவது காண்டம் உத்தரகாண்டம் அது அரக்கர்களின் பிறப்பைச் சொல்வது. கம்பர் அதைப் பாடவில்லை. இராமனுடைய அவதாரத்தைப் பாடிய வாயால் அரக்கர்களின் பிறப்பை ஏன் பாடவேண்டுமென்று பாட வில்லையாம். இங்கே கச்சியப்பருக்கு அரக்கர்களின் வரலாற்றைப் பாடவேண்டிய அவசியம் நேர்ந்தது. அப்போதுதான் முருகப் பெருமானின் உயர்ந்த வீரத்தின் சிறப்புத் தோன்றும். அப்படிப் பாடியவர் இடையில் ஆசுவாசப்படுத்திக்கொள்ள, அகத்தியர் கதையை விரிவாக அமைத்தார். " இந்திரன் சிவபூஜை செய்தான். அந்தப் பூஜைக்கு வேண்டிய பூக்களைத் தந்த நந்தவனம் மழை இல்லாமல் வாடியது. சூரபன்மாவினுடைய அதிகாரத்தால் மழை இல்லாமல் போயிற்று. மறுபடியும் காவேரி வந்ததனால் நந்தவனம் தழைத்தது" என்று சொல்ல வந்தவர், அகத்தியர் காவிரியை உண்டாக்கினார் என்று சொல்வதோடு நிறுத்திக்கொள்ளாமல் அவருடைய அருஞ்செயல்களை விரிவாகச் சொன்னார். மகாபாவிகளின் செயல்களைச் சொல்லும் போது நடுவில் புண்ணிய மூர்த்தியின் கதைகளும் இருக்கட்டும் என்று சொன்னதுபோலச் சொன்னார். திருமால் சிவபெருமானாக மாறினது கண்டு வைணவர்கள் எதிர்த்தார்கள். அப்போது அகத்தியர் கோபத்தில் எழுந்து பார்த்தார். அவர்கள் ஓடிவிட்டார்கள். அன்று முதல் அது சிவத்தலம் ஆகிவிட்டது. "இங்குள்ள சிவலிங்கப்பெருமானை அருச் சித்து வழிபடுங்கள்" என்று அன்பர்களிடம் மொழிந்தார். அங்கே இருந்த சிவபெருமானிடம் அகத்தியர் விடைபெற்றுக்கொண்டு மீண்டும் தெற்கே சென்று பொதிய மலையை. அடைந்து அங்கே சிவபெருமானைத் தியானித்து, தவம் புரிந்துகொண்டு இன்பமாக அமர்ந்திருந்தார்.