பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசமுகியின் சோகமும் சூரன் செய்த தண்டமும் 271 பெரிய புராணத்தில் வருகிறது. திருக்கோவிலூரில் இருந்து அரசாண்ட மன்னர் மெய்ப் பொருள் நாயனார். முத்திகாதன் அவருடைய விரோதி. அவன் மெய்ப்பொருள் நாயனாரை வெல்ல வேண்டுமென்று எண்ணினான். பல முறை படையெடுத்து வந்தான். அவனால் அவரை வெல்ல முடிய அவன் முத்திநாதன் என்ற பெயரை உடையவனாக இருந் தாலும் அந்தப் பெயருக்கு ஏற்றபடி இருக்கவில்லை; புத்திநாதனாகக் கூட இருக்கவில்லை. மெய்ப்பொருள் நாயனார் வரலாறு மெய்ப்பொருள் நாயனார் எப்போதும் அடியார்களுடைய தோற்றத்தைக் கண்டு வணங்குவார்; சிவபெருமானுடைய அடியார் களின் வேடம் சிவவேடமே என்று மதிப்பார். திருநீறும், கண்டிகை யும் கண்டால் உடனே வணங்கும் தன்மை உடையவர் அவர். வேடத்தில் என்ன இருக்கிறது என்று கேட்கலாம். வேடம் என்பது ஓர் அடையாளம். இந்தக் காலத்தில் அடையாளம் இல்லாமல் எதுவும் இல்லை. ஒவ்வொரு வகையான உத்தியோகத் திற்கும் தனித்தனி அடையாளங்கள் இருக்கின்றன. அடையாளங் களைப் போலியாக யாராவது மேற்கொண்டால், அதனால் போலியாக இருப்பவனுடைய குற்றம் தெரியுமே தவிர, அடையாளத்திற்கு ஒரு மாசும் இல்லை. சேரமான்பெருமாள் நாயனார், உடம்பெல்லாம் உவர் மண்ணால் வெளுத்திருக்கும் ஒரு வண்ணானைக் கண்டார். அதைத் திருநீறு என்று எண்ணி அவர் அவனை வணங்கியவுடனே, அந்த வண்ணான் நடுங்கிப் போய், "அடியேன் வண்ணான் நன்றான். அடியேன் அடிச்சேரன்' என்று சொல்லி அவர் வணங்கினாராம். நீறு பூசிய உடம்பைக் கண்டாலே வணங்கும் உள்ளம் அந்தப் பெரிய அடியார்களுக்கு இருந்தது. 14 " முத்திநாதன், மெய்ப்பொருள் நாயனாரைப் போர் செய்து வெல்ல முடியாது என்பதைத் தெரிந்துகொண்டான். வஞ்சனையாக வெல்ல எண்ணினான். உடனே உடம்பெல்லாம் திருநீறு பூசிக் கொண்டு சிவனடியாரைப்போல அவரது அரண்மனைக்குள் நுழைந் தான். மெய்ப்பொருள் நாயனார் இருக்கிற அரண்மனைக்குக் காவலாகத் தத்தன் என்பவன் இருந்தான். மெய்ப்பொருள் நாயனார் அப்போது தம் மனைவியோடு இளைப்பாறிக் கொண்டிருந்தார். ஆகவே தத்தன்,