அசமுகியின் சோகமும் சூரன் செய்த தண்டமும் 275 குதிரைச் சம்மட்டி என்று அகராதியில் பொருள் இருக்கும். அது சவுக்குத்தான். கரிகாலன் மகாசாஸ்தாவின் திருக்கரத்தில் ஒரு செண்டைக் கொடுத்து வாங்கிக்கொண்டு வடக்கே போனான். வடக்கே மேரு மலை இருந்தது. அதைத் தன் சவுக்கினால் அடித்தவுடன் அது வழிவிட்டது என்பது வரலாறு. கச்சி வளைக்கைச்சி காமக்கோட்டம்கரவல் மெச்சி இனிதிருக்கும் மெய்ச்சாத்தன் கைச்செண்டு கம்பக் களிற்றுக் கரிகாற் பெருவளத்தான் செம்பொற் கிரிதிருத்த செண்டு." (கச்சி - காஞ்சிபுரம்; வகைக்கைச்சி - வரையை அணிந்த காமாட்சியம்மை. காமக்கோட்டம் - காமாட்சியம்பிகை திருக்கோயில். கம்புக்கனி - தறியில் கட்டும் யாளை. செம்பொற் கிரி - மேரு.) இது பழைய பாடல். இந்திராணியை இந்திரன் மகாசாஸ்தாவிடம் ஒப்படைத்து ' "நான் கைலாசம் வரைக்கும் போகிறேன். என்று நான் திரும்பி வரும் வரைக்கும் நீதான் இவளைப் பாதுகாக்க வேண்டும்" விண்ணப்பித்துக்கொண்டான். மகாசாஸ்தாவின் பூதகணங்களுக்குள் உயர்ந்தவன் மகாகாளன். சாஸ்தா அந்த மகாகாளனைப் பார்த்து, 'நீ இந்திராணியைக் காப்பாயாக' என்று உத்தரவிட்டார். அவருடைய ஏவலின்படி மகாகாளன் அங்கே இருந்து இந்திராணி யைக் காப்பாற்ற முன்வந்தவுடன், இந்திரன் இந்திராணிக்குத் தக்க பாதுகாப்புக் கிடைத்தது என்ற எண்ணத்துடன் கைலாசத்திற்குப் போனான். இந்திரன் கைலாசம் செல்லுதல் கைலாசத்தில் சிவபெருமான் திருக்கோவிலின் வாயிலில் நந்தி தேவர் இருந்தார். அந்தச் சமயத்தில் பெருமான் யோக நிஷ்டையில் இருந்தான். "சில காலம் இங்கே தங்குங்கள்” என்று நந்தி தேவர் சொல்ல, இந்திரன் முதலிய தேவர்கள் அங்கேயே தங்கியிருந்தார்கள். தேவர்கள் அங்கே இருக்க, இங்கே சீகாழியில் மகாகாளனுடைய காவலில் இந்திராணி இருந்தாள். பிருகஸ்பதி முருகப் பெருமானுக்கு அசுரர்களுடைய வரலாற் இங்கே சூரபன்டி றைக் கூறிக்கொண்டு வருகிற இடம் இது.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/295
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை