பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசமுகியின் சோகமும் சூரன் செய்த தண்டமும் 277 அடிக்கடி ஏதாவது கேட்டால் தகப்பனாருக்குக் கோபம் வரும்; குழந்தையை அடிக்கப் போய்விடுவார். தாய்தான் பொறுமை யோடு எல்லாவற்றையும் சகிப்பாள். ஆகவே, பெண்களுக்கு முக்கிய மான குணமாக இருப்பது பொறை. அனுமன் சீதாபிராட்டியைக் கண்டதாக இராமனிடம் சொல் லும்போது. " இவ்பிறப்பு என்ப தொன்றும். இரும்பொறை என்ப தொன்றும் கற்பெனும் பொர தொன்றும் களிநடம் புரியக் கண்டேன்' என்று பொறையை நடுநாயகமாக வைக்கிறான். அந்தக் குணம் சிறி தேனும் இல்லாதவள் அச. அடுத்தபடி, என்கிறார். அருள் இல்லவள் அருள் என்பது எந்தப் பயனையும் எதிர்பாராமல் எல்லோரிடமும் அன்பு செய்வது. அருள் உடையவர்கள் தேவர்கள். இறைவன் அருள் உடையவன். என் தாயிற் சிறந்த தயாவான தத்துவனே" று மாணிக்கவாசகர் பாடுகிறார். தாயைவிடச் சிறந்தவன் என்பதனால், தாயினிடத்தில் அத்தகைய குணம் உண்டு என்பதும் தெரிகிறது. தாயின் பெருமையை மாணிக்கவாசகர் வேறோர் இடத்தில் சொல்கிறார். .. பால்லினைந் தூட்டும் தாயினும் சாலப் பரிந்து என்கிறார். தாயைவிடப் பரிவு உடையவன் ஆண்டவன் என்று சொல்வதன் மூலம் தாயின் பெருமையையும் குறிப்பிடுகிறார். $4 ஒரு வீட்டில் வீட்டுக்காரன் நான்கு அன்பர்களோடு சீட்டு ஆடிக்கொண்டிருக்கிறான். அந்த வீட்டுக்காரி தன் குழந்தையைத் தொட்டிலில் உறங்கவிட்டுப் பக்கத்து வீட்டுப் பெண்களோடு பேசிக் கொண்டிருக்கிறாள். அப்போது குழந்தை வீல் என்று அழுகிறது. எறும்பு கடித்துவிட்டதா? பார்'" என்று கத்துகிறான் வீட்டுக் காரன். குழந்தையின் அழுகைக்கு எறும்பு கடித்ததாக அவன் பொருள் பண்ணிக்கொள்கிறான். சீட்டாட்டத்திற்கு அது இடை யூறாக இருக்கிறது. ஆனால் அந்த வீட்டுக்காரியுடன் பேசிக்கொண் டிருந்த பெண்களோ, "குழந்தைக்குப் பால் கொடுக்க வேண்டுமோ?"