பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/298

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 கந்தவேள் கதையமுதம் என்று கேட்கிறார்கள். தாய் உள்ளே ஓடி அந்தக் குழந்தையை எடுத்துப் பால்கொடுக்கத் தொடங்குகிறாள். குழந்தை அழுவதைக் கேட்டவுடன் ஆணாகிய ஜடம் எறும்பை நினைக்கிறான். பெண் களுடைய தாய் உள்ளம் பாலை நினைக்கிறது. அவர்கள் நினைத்து அதைச் சொல்வதோடு நிற்கிறார்கள். ஆனால் தாயோ பாலூட்ட வேண்டும் என்று நினைத்துக் குழந்தைக்கு ஊட்டுகிறாள். கொடுக் கின்ற உரிமை அந்தக் குழந்தையின் தாய்க்கே உரித்தாகிறது. ஆண்டவன் அந்தத் தாயையும்விட அருள் உடையவன் என்கிறார் எங்கே அருள் இருக்கிறதோ அங்கே தாய்த் தன்மை உண்டு. இங்கே அசமுகியை வருணிக்க வந்தவர் அவள் அருள் இல்லவள் என்றார். மாணிக்கவாசகர். அடுத்து 'நிறையில்லவள்' என்று சொல்கிறார். நிறையாவது, உள்ளத்தைக் கண்டபடி ஓடவிடாமல் நிற்குமாறு செய்வது. அது தான் தன்னைக் காத்துக்கொள்கிற பண்பு. அதை, 22 தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண்" என்ற குறளில் வள்ளுவர் சொல்கிறார். 4 அடுத்து நாண் இல்லாதவள்' என்று அசமுகியின் இயல்பைச் சொல்கிறார். பெண்களுக்கு நாணம் மிகச் சிறந்தது. "உயிரினும் சிறந்தன்று நாணே" என்று தொல்காப்பியம் சொல்கிறது. இயல் பாகப் பெண் குழந்தைகளுக்கு நாணம் இருக்கும். ஆண் குழந்தை களுக்கு மிடுக்கு உடன் பிறந்ததாக இருக்கும். தனக்குரிய ஆற்றலை, நாணத்தால் வெளிக்காட்டிக்கொள்ளாமல் இருப்பவர்கள் பெண்கள். அடுத்து, நிற்கின்ற தொல் அறத்தின் முறை இல்லவள் என்கிறார். அறத்தின் முறையைக் காப்பாற்றுபவர்கள் பெண்கள். ஆணும் பெண்ணும் சேர்ந்து நடத்துவது இல்லறம். என்றாலும் இல்லத்திற்கு உரியவளாக இருப்பவள் மனைவி. அவளைத் தான் இல்லாள் என்பர். ஒருவன் எவ்வளவு பெரிய மாளிகை கட்டிக்கொண்டு வாழ்ந்தாலும் அவனுக்கு மனைவி இல்லாவிட்டால் வீடு வீடாகாது. வீட்டுக்குத் தலைவியாக இருக்கிறவள் பெண்தான்.