அசமுகியின் சோகமும் சூரன் செய்த தண்டமும் 279 இல்லாள் என்ற சொல் உண்டே தவிர இல்லான் என்று கணவனுக்குப் பெயர் கிடையாது. இல்லான் என்றால் ஒன்றும் இல்லாதவன், வறியவன் என்று பொருள்படுமே தவிர, வீட்டிற்குத் தலைவன் என்ற பொருள் தராது. வீட்டுக்குரியவன் தானம் செய்யும் போது, வீட்டிலுள்ள பெண்மனி நீர் வார்த்தால்தான் அது தானம் ஆகும். அறம் செய்வதற்குரிய துணையாக இருப்பதனால் பெண்ணைத் தர்மபத்தினி என்று சொல்கிறார்கள். பரமேசுவரன் அளித்த இரு பிடி நெல்லைக் கொண்டு 32 தர்மங்களை வளர்த்தாள் பரமேசுவரி. அவளை அறப்பெருஞ்செல்வி என்பர். வடமொழியில் அதனையே தர்ம சம்வர்த்தனி என்பர். இந்தப் பாட்டில் அசமுகியிடத்தில் இன்ன குணங்கள் இல்லை என்பதைச் சொன்னாலும், மறைமுகமாகப் பெண்களுக்கு என்ன என்ன பண்புகள் இருக்கவேண்டும் என்பதையே குறிப்பிக்கிறார் ஆசிரியர். பொறை,அருள்,புகழ்,நிறை, நாண், அறத்தின் முறை, வடிவு, கற்பு ஆகிய இவைகள் எல்லாம் யாரிடம் அமைந்திருக்கின்றனவோ அவர் களே சிறந்த மகளிர். ஆனால் இங்கோ அசுரப் பெண்ணாகிய அசமுகி அந்த நல்ல குணங்களில் ஒன்றும் இல்லாமல் இருந்தாள். அசமுகி சீகாழி வகுதல் பல இடங்களுக்குச் சென்று திரிந்து வந்த அசமுகி சீகாழிக்கு அருகே வந்தாள். அங்கே இந்திரன் அமைத்திருந்த நந்த வனத்தைக் கண்டாள். துன்முகி என்ற தோழி ஒருத்தியும் அவளுடன் வந்தாள். அவர்களை மகாகாளன் கண்டான்; யாரோ புதியவர்களாக இருக்கிறார்கள், என்ன செய்யப் போகிறார்கள் என்று பார்க்கலாம்' என்று மறைவாக இருந்தான். 1 அசமுகி இந்திராணியைக் கண்டாள். 'என்னுடைய அண்ணன் காதல் கொண்ட இந்திராணி இங்கே இருக்கிறாள். இவளை அடை வதற்கு அவன் எங்கெங்கோ ஆட்களை அனுப்பி, இவளைக் காணமாட் டாமல், இவளை அடையாமல் ஏங்கி இருக்கிறான். நான் இவளைக் கொண்டுபோய் எப்படியேனும் அவனுடன் சேர்த்துவிட்டு, இவளாலே நீ இன்பம் பெறலாம் என்று சொல்லப்போகிறேன்' என்று எண்ணினாள்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/299
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை