பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 கந்தவேள் கதையமுதம் தாள்களில் மொத்தக் கருத்தை முதல் நான்கு வரிகளில் வெளியீடுவது போல, சிலவற்றை மாத்திரம் ஓரளவு என் அறிவுக்குத் தெரிந்த வரையில் சொல்லலாம் என்று நினைக்கிறேன். 26 கந்தபுராணம் தோன்றிய வரலாறு ސ என்று கந்தபுராணம் தோற்றிய காலம்' 13-ஆம் நூற்றாண்டு என்று சொல்வார்கள். இந்தப் புராணத்தைப் பற்றி ஓர் அழகான வரலாறு உண்டு. முருகப்பெருமானுடைய திருவருளை முன்னிட்டுக் கச்சியப்ப சிவாசாரியார் இதைப் பாடவேண்டுமென்று எண்ணினார், அவருடைய தந்தையார் காளத்தியப்ப சிவாசாரியார். காஞ்சிபுரத்தில் பல பேர்கள், முருகப்பெருமானிடத்தில் இணையில்லாத பக்தியுடைய நீங்களே கந்தபுராணத்தைத் தமிழில் பாடவேண்டும்" அவரை வற்புறுத்தினார்கள். ஆண்டவன் திருவருள் கூட்டு வித்தாலன்றிப் பாட இயலாது என்று அவர் எண்ணினார். 'இதை எப்படிப் பாடுவது?' என்று நினைத்துக் கொண்டிருந்தபோது, 'திகட சக்கரம்' என்ற தொடர் அசரீரியாகக் கிடைத்தது. அதைக் கேட்டு, இறைவன் திருவருள் பாலித்தான் என்று ஆனந்தம் கொண்டு அதையே தொடக்கமாக வைத்துப் பாடலானார். எல்லாவற்றையும் பாடி முடித்த பிறகு அரங்கேற்றம் நடத்த ஏற்பாடு ஆயிற்று. ஒரு நூலை இயற்றிய பிறகு பல புலவர்கள் வீற்றிருக்கிற சபையில் அதனை அரங்கேற்றம் செய்வது அந்தக் காலத்து வழக்கம். மாபெரும் புலவரும், கிறந்த இலக்கணத்தை இயற்றியவருமான தொல்காப்பியர் அதங்கோட்டு ஆசான் அவையில் தம் இலக்கண நூலை அரங்கேற்றினார் என்று தெரியவருகிறது. பழங்காலத்தில் எவ்வளவு பெரிய புலவர்களாக இருந்தாலும் தம்முடைய நூலைப் புலவர்கள் கூடியுள்ள சபையில் அரங்கேற்றம் செய்வது என்பது வழக்கமாக இருந்து வந்திருக்கிறது. இந்தக் காலத்தில் இந்த வரையறை போய்விட்டது. ஒரு பாட்டைப் பாடி, இந்தப் பாட்டைப் போல வேறு யார் பாடுவார்கள் என்று தாமே எல்லோரிடமும் பிரசாரம் பண்ணுகிற பழக்கம் இப்போது ஏற்பட்டிருக்கிறது. கந்த புராணம் காஞ்சிபுரத்தில் முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் குமரகோட்டத்தில் அரங்கேற்றம் ஆயிற்று. அரங்கேற்றம் நடந்த மண்டபம் அக்கோயிலில் தனியாக இருக்கிறது.