பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசமுகியின் சோகமும் சூரன் செய்த தண்டமும் 281. அவளுடைய வார்த்தையைக் கேட்ட இந்திராணி,"என்னுடைய உள்ளம் என் நாயகனாகிய இந்திரனையே சார்ந்தது. மாசு இல்லாத கற்புடையவள் நான். என்னிடத்தில் வந்து இதைச் சொல்கிறாயே! இந்த வார்த்தையினால் உன் குலம் அழிந்து போகுமே! அவர்கள் வாழ்வதற்குரிய வார்த்தையாக இல்லையே!" என்று கோபத்தோடு சொன்னாள். 4 இந்தி ரற்கலால் ஏவர் பாலினும் சிந்தை வைத்திடேன் ; த்தில் கற்பினேன்; வந்தெ னக்கிது வகுத்தி ; நின்கிளை உய்ந்தி டத்தகும் உரைய தன்றிதே. " (இந்திராணி மறுதலைப்.9.) [வகுத்தி-சொல்கிறாய். கிளை சுற்றம்.] ஏவர் பாலினும் சிந்தை வைத்திடேன்; தீதில் கற்பினேன் என்று சொல்கிறாள். மிக உயர்ந்த கற்பு, சிந்தையினாலும் பிறரை நினைக்காதது. சிந்தை வைத்திலேன் என்றது, 'பிறரை நான் மனத்தாலும் நினைக்கமாட்டேன்' என்று சொன்னதே ஆகும். தீதில் கற்பு' என்பது பிறனுடைய உள்ளத்தில் புகாத கற்பு. அத்தகைய கற்பை உயர்ந்த கற்பு என்று சொல்வர். பழைய நூல்களில் இதைப் பற்றிய செய்திகள் வருகின்றன. இந்திராணி, "உன்னுடைய கிளைகள் எல்லாம் அழிந்துபடத் தகுந்த வார்த்தைகளைச் சொல்கிறாயே !" என்று சொல்லவில்லை. நின்கிளை, உய்ந்தி டத்தகும் உரைய தன்றிதே என்றாள். நாகரிகமான பேச்சு அது. உன்னுடைய சுற்றத்தார்கள் வாழ்வதற்குரிய வார்த்தை அல்லவே இது!" என்று சொன்னாள். இங்கே ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. திருவையாற்றுக்குப் பக்கத்தில் திங்களூரில் அப்பூதி அடிகள் என்ற சிவபக்தர் இருந்தார். அவர் எல்லோரும் நடக்கும் சாலையில் ஒரு தண்ணீர்ப் பந்தல் வைத்தார். அவருக்கு அப்பர் சுவாமிகளிடம் மிகுந்த பக்தி. ஆனால் அவர் அப்பர் சுவாமிகளை நேரில் கண்டதில்லை. அவர் இறைவன் திருவருளைப் பெற்றவர் என்ற பெருமதிப்பால் தம் குழந்தைக்குத் திருநாவுக்கரசு என்று பெயர் வைத்தார். திருநாவுக்கரசர் தண்ணீர்ப் பந்தல் என்று அந்தப் பந்தலுக்குப் பெயர் வைத்தார். ஒரு சமயம் 36