பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/303

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அசமுகியின் சோகமும் சூரன் செய்த தண்டமும் தன்னைத் தடுக்க 283 வருகிறவன் யார் என்று அசமுகி யோசித்தாள். 'இந்திரனுடைய ஏவலாட்களுள் ஒருவனாக இருக்க வேண்டும். அவனை இப்பொழுதே அழித்து விடுகிறேன்' என்று கையிலுள்ள சூலத்தை விட்டாள். புந்தியில் இதனை உன்னிப் பொள்ளெனச் சினம்மிக் கொள்ள இந்திரன் தொழுவன் கொல்லாம் எனை இடை தடுக்கும் நீராள்: சிந்துவன் இவனை என்னாச் செங்கையில் சூலந் தன்னை உந்தினள்; அதுபோய் வீரன் உரன்எதிர் குறுகிற் றன்றே. (மகாகாளர்.14.) [புந்தி - மனம்.பொள்ளென - விரைவில். மீக்கொள்ள - ஓங்க. தொழுவன் - ஏவலன். சிந்துவன் - கொல்வேன். உரன் -மார்பு.] அந்தச் சூலம் மகாகாளனுடைய மார்பை நோக்கிச் சென்றது. அந்தச் சமயத்தில் அந்தப் பெருவீரன் தன் வாளால் அந்தச் சூலத்தை இரண்டு துண்டாக்கினான். துன்முகியின் கையிலிருந்த சூலத்தை வாங்கி, மகாகாளனைத் தாக்க வந்தாள் அசமுகி. அந்தச் சூலத்தையும் தன் வாளால் துண்டாக்கினான் மகாகாளன். அவள் மலையை எடுத்து வீசினாள். அவனது வாள் ஒடிந்தது. "உன்னைத் தின்றாலும் என்னுடைய பசி தீராது. ஆகவே உன்னைத் தொலைக் கிறேன். பார்" என்றாள். "நீ பெண்ணாக இருப்பதனால் நான் உன்னைக் கொல்லவில்லை. நீ இந்திராணியை விட்டுவிட்டு உயிர் பிழைத்துப் போ" என்றான் மாகாளன். அசமுகி பார்த்தாள். 'இவனோடு போர் செய்து இவனை வெல்வது அரிதாக இருக்கும். நாம் இந்திராணியைத் தூக்கிக் கொண்டு ஓடிவிடவேண்டும்' என்று நினைத்தாள். என்றலும் கொடியள் கேளா ஈங்கிவன் வாளும் இன்றி நின்றனன்; இவனோ டேபோர் நேருதல் நெறிய தன்றல்; அன்றியும் இவனை வெல்லல் அரிதினிச் சசியைக் கொண்டு சென்றிடல் துணீயாம் என்னாத் திரும்பினள் சேடி. தன்பால். (மகாகாளர்.35.) கொடியள் - அசமுகி நெறியது -முறை. துணிபு -உறுதி.) அதனைப் பார்த்த மகாகாளன், "ஏ அசுரப் பெண்ணே,நில்" என்று சொல்லி, அவள் கூந்தலைப் பற்றி இழுத்து, தன் உடை வாளால்,இந்திராணியைத் தொட்டுத் தூக்கிய கையைத் துண் டாக்கினான்.