பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை 11 கச்சியப்ப சிவாசாரியார் குமரகோட்டத்தில் அர்ச்சகராக இருந்தவர். அவர் அங்கே கந்தபுராணத்தை அரங்கேற்றம் செய்த போது அவரிடத்துப் பொறாமையுள்ள ஒருவர் முதல்பாட்டைச் சொல்லும்போதே தடை கூறினார். திகட சக்கரச் செம்முக மைந்துளான் என்று தொடங்குகிறது விநாயகர் காப்புப் பாடல். திகட சக்கரம் என்பதை, திகழ் தசக்கரம் என்று பிரித்துப் பொருள் கூறினார் சிவாசாரியார். "ளகரத்தின் முன் தகரம் வந்தால் டகரமாவதற்கு விதி இருக்கிறது. மகரத்தின்முன் தகரம் வந்தால் !டகரமாவதற்கு எங்கே விதி இருக்கிறது?" என்று அந்தப் பொறாமைக்காரர் கேட்டார். இந்தப் பாட்டில் அவ்வாறு வந்தது தவறு" என்று சொன்னார். அப்போது சிறிது மயங்கிய கச்சியப்ப சிவாசாரியார், "நாளைக்கு அதற்கு விடை சொல்கிறேன்" என்று சொல்லி முடித்துவிட்டார். ஆண்டவனையே நினைத்து அன்று படுத்திருந்தார். "எம்பெருமானே, நீதானே அடியெடுத்துக் கொடுத்தாய்? நீ எடுத்துக் கொடுத்த தொடரிலேயே தவறு இருக்கிறது என்று ஒருவர் சொல்கிறார், இது நியாயந்தானா?" என்று வருந்தினார். அப்போது,"நாளைய தினம் நாம் வருகிறோம்.நீ கவலைப்படாதே" என்று கனவில் இறைவன் அனுக்கிரகம் செய்தான். மறுநாள் சபை கூடியது. அப்போது ஒரு புலவர் வேடத்தில் முருகன் வந்தான். திகழ் தசக்கரம் என்பது திகட சக்கரம் என்று ஆவதற்குரிய இலக்கணம் இது என்று வீரசோழியத்தில் உள்ள ஒரு சூத்திரத்தை எடுத்துக் காட்டினார் வந்த புலவர். வீரசோழி யத்தில் அதற்கு இலக்கணவிதி இருக்கிறது. அந்த நூலில் சந்திப் படலத்தில் 15-ஆவது சூத்திரத்தில், "எண்ணிரண்டாய்த், தோன்றுடல் பின்னர்த் தகாரம் வரின் இரண் டும்தொடர்பால், ஆன்ற ஐந் தாம்உடல் ஆம்; முன்பில் ஒற்றுக்கு அழிவுமுண்டே" என்று வருகிறது. ழகரம், ளகரம் இரண்டின் முன்னும் தகரம் வந்தால் டகரம் ஆகும் என்று அந்தச் சூத்திரம் சொல்கிறது. இதனைக் கேட்டவுடன் பொறாமைக்காரர் வாய் அடங்கினார். இந்தச் செய்தியைத் திருப்புகழில் அருணகிரிநாதர்,