அசமுகியின் சோகமும் சூரன் செய்த தண்டமும் 295 இப்படிக் கதை சொல்லி வந்த தேவகுரு முருகனைப் பார்த்து ஒரு விண்ணப்பத்தைச் சொன்னார். "பிரமன் சூரபன்மாவுக்குப் பஞ்சாங்கம் சொல்லித் திரிகிறான். திருமால் அவனோடு போர்செய்து தோல்வியுற்றான். சிவபெருமான் சூரனுக்கு நல்ல வரங்களை எல்லாம் அளித்திருக்கிறார். ஆகவே சூரனோடு அவர் போர் புரியவில்லை. இந்த நிலையில் தேவர்கள் துன்புறுகிறார்கள். நீயே சூரபன்மனிடம் சென்று அவனை அழித்து அருளவேண்டும்" என்று தேவகுரு பிரார்த்தித்தார். வேதங்களை ஓதுகின்றவன் நான்முகன். இப்போது சூரபன்மா வுக்கு முன்னாலே பஞ்சாங்கம் படிக்கிறான். வாரம், திதி, நட்சத்திரம். யோகம், கரணம் என்பவை ஐந்து அங்கங்கள். நாம் இப்போது தினக் காலண்டர் வாங்கி வைத்திருக்கிறோம். ஒவ்வொரு நாள் முடிந்தவுடன் ஒரு தாள் கிழிகின்றது. அதில் நாள், நட்சத்திரம் எல்லாம் போட்டிருக்கும். பெரிய கோவில்களில் பஞ்சாங்கம் வாசிப்பதற்கு என்றே ஒருவர் இருப்பார். கணிதம் வல்லவர்கள் காலையில் எழுந்தவுடன் மன்னன் முன்பு சென்று, இன்றைக்கு இன்ன நாள், இன்ன திதி என்று பஞ்சாங்கம் சொல்வார்கள். திருப்பதியில் இன்றைக்கும் நாள்தோறும் பஞ்சாங்கம் படிக்கிறார்கள். அதுபோல் சூரபன்மாவின் அரண்மணையில் உலகத்தை எல்லாம் படைக்கின்ற பிரமன், எப்போதும் வேத பாராயணம் செய்கின்ற பிரமன், இப்போது பஞ்சாங்கம் படித்துக்கொண்டிருந்தான். "பரமசிவன் சூரபன்மாவுக்கு வரம் கொடுத்தவர்; ஆகையால் சூரனை அவரே அழிக்க நினைக்கமாட்டார். திருமால் சூரனிடம் தோற்றுப்போன சமாசாரந்தான் உனக்குத் தெரியுமே ! நீ ஒருத்தன் தான் எஞ்சியிருக்கிறாய். ஆகவே நீதான் சூரபன்மாவை அழித்து எங்களுக்கெல்லாம் அருள் செய்யவேண்டும்" என்று வேண்டிக் கொண்டார் பிருகஸ்பதி. ஐத்தியல் அங்கம் சூரற்கு அயன்புகன்று உழல்வான் நாளும்; இந்திறை கேள்வன் போர்செய்து எஞ்சினன்; எவர்க்கும் மேலாய், முந்திய சிவன்அன் னோற்கு முதல்வரம் அளித்தான்; பின்னர் வந்துஆடல் புரியான் ; நீயே மற்றுஅனற் கோறல் வேண்டும். (ஐந்தியல் அங்கம் - பஞ்சாங்கம். (அமரர் சிறை-188) இந்திரை கேள்வன் - திருமகள் கணவனாகிய அடல் புரியான் அழிக்கமாட்டான். திருமால், எஞ்சினள் - தோல்வியடைந்தான். கோறல் - அழித்தல். .
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/315
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை