298 கந்தவேள் கதையமுதம் " அப்போது, யாரைத் தூதுவராக அனுப்புவது என்ற கேள்வி வந்தது. வாயுதேவன், "என்னாலே வீரமகேந்திரத்திற்குச் செல்ல முடியாது என்று சொன்னான். "நான் பஞ்சாங்கம் பார்க்கப் போகலாமே தவீரத் தூதுவனாகப் போக முடியாது" என்று நான்முகன் சொன் னான்: "வீரமகேந்திரபுரத்திற்குச் சென்று வரக்கூடிய ஆற்றல் உடையவர் வீரவாகு தேவர் ஒருவர்தாம்" என்றும் சொன்னான். உடனே முருகன் வீரவாகு தேவரைப் பார்த்து, "நீ தூது போய் வா என்று பணித்தான். அப்போது அவர் மிகவும் மகிழ்ந்து, "போகபோக்கியங்களை அனுபவிக்கிற சூரபன்மாவிடம் போய், எம்பெருமானே, நீ அருளிச் செய்தவற்றை எல்லாம் சொல்கிறேன். அவன் என்ன எண்ணு கிறான் என்பதைத் தெரிந்துகொண்டு வருகிறேன்" என்று முருகனைப் பணிந்துவிட்டுப் புறப்பட்டார். வெந்திறல் அவுணர் ஈண்டும் வீரமா மகேந்தி ரத்தில் சுந்தரத் திருவின் வைகும் சூரபன் மாவின் முன்போய் எந்தைநீ அருளிற் றெல்லாம் இசைத்தவன் உள்ளம் நாடி வந்திடு கின்றேன் என்னா, வணங்கியே தொழுது போனான். (வீரவாகு கந்தமாதனம்.18-) (ஈண்டும் -கூடியிருக்கும். சுந்தரிக் கிருவின் வைகும் - அழகிய செல்வ வாழ்விலே வாழ்ந்திருக்கும். அப்போது இந்திரன் வீரவாகு தேவருடன் வெளியே வந்து, தனியாக அவரை அழைத்துச் சில வார்த்தைகள் சொன்னான். தேர்த லில் ஒருவர் வென்று எம்.எல்.ஏ. ஆகி முதல் முதலாகச் சட்டசபைக் கூட்டத்திற்குச் சென்னை போகிறார். அங்கே போய் என்ன என்ன பேசவேண்டுமென்று ஆலோசித்து நினைத்துப் பார்க்கிறார். காட்டுக் கும், நாட்டு மக்களுக்கும் பயனுடையன எவை என்பதைப் பற்றிப் பலர் அவரிடத்து எடுத்துச் சொல்கிறார்கள். அவர் ஊருக்குக் கிளம் பும் போது ஒரு நண்பர் வந்து, "சென்னையில் என் மைத்துனர் இருக் கிறார். அவரிடம் போய் நான் இரண்டொரு நாளில் அரிசி அனுப்பி வைப்பதாகச் சொல்லுங்கள். ஏன் கடிதமே போடவில்லை, அங்கே சரிவரத் தண்ணீர் கிடைக்கிறதா என்று நான் கேட்டதாகச் சொல் லுங்கள்" என்று சொல்கிறார். எல்லோருக்கும் உரிய பொதுவான கருத்தோடு, தம்முடைய சொந்தக் கருத்தையும் தனியாகச் சொல்லி
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/318
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை