வீரவாகுவீன் வீரச் செயல்கள் நீர் வரும். புளகாங்கிதம் தோன்றும். 303 இறைவனை நினைந்து கண்ணீர் விடுவது பக்தர்களுக்கு அடையாளம் என்பதை மிக அருமையாகத் தாயுமானவர் பாடுகிறார். உடல்குழைய என்பெலாம் நெக்கருக விழிநீர்கள் ஊற்றென் வெதும்பி ஊற்ற". " என்று மாணிக்கவாசகரே சொல்கிறார்; மாணிக்கவாசகரை, அழுது அடி அடைந்த அன்பன் பரஞ்சோதியார் சொல்கிறார். 'எம்பெருமானே, நான் உன்னிடத்தில் அதிகமாக அன்பு வைத்திருப் பதாக நினைக்கிறேன். ஆனால் நான் பொய்யன். என் நெஞ்சும் பொய். அதனிடத்துள்ள அன்பும் பொய். ஆனால் ஒன்று கேட் கிறேன். என்னை அழும்படி செய். அப்போது நான் உன்னைப் பெறலாம்' என்கிறார். 46 'யானே பொய்என் நெஞ்சும் பொய்என் அன்பும்பொய்; ஆனால் வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே". இங்கே ஒரு கேள்வி கேட்கத் தோன்றுகிறது. எல்லாமே பொய் யாகும்போது அழுகை மட்டும் மெய்யாகுமா? ஓர் ஊரிலுள்ளவர்கள் சிலர் சேர்ந்து நாடகம் போட்டார்கள். வெவ்வேறு வேலைகளைச் செய்கிறவர்கள் அந்த நாடகத்தை நடத்தி னார்கள். பலசரக்குக் கடையில் வேலை செய்கிற குப்புசாமி என்ப வன் அரசனாக வேடம் பூண்டான். அரசன் நாள்தோறும் தூங்கப் போவதற்கு முன்னாலே அரசியோடு பேசிக்கொண்டிருப்பான்; அவள் தருகிற பாலைக் குடித்துவிட்டுத் தூங்கப் போவான். ஒரு சமயம் அரசி வெளியூருக்குப் போயிருந்தாள். தன் தோழியிடம் இரவில் அரசனுக்குப் பால் கொடுக்கும்படி சொல்லி இருந்தாள். பகைவர் கள் இதுதான் சமயம் என்று அந்தத் தோழியை வசப்படுத்தி அர சனுக்குக் கொடுக்க எடுத்துச் சென்ற பாலில் நஞ்சைக் கலக்கச் செய்தார்கள். தோழி பால் கொடுக்க, அரசன் அதைக் குடித்தான். அவன் இறந்துவிட்டான். பகைவர்கள் ஆட்சியைக் கைப்பற்றினார் கள். அரசனுடைய பிள்ளை அரசியோடு சென்றிருந்த காரணத் தினால் தப்பினான். அவன் பல காலம் ஒளிந்து வளர்ந்து, பின் பகைவர்களை எதிர்த்துப் போரிட்டு, திரும்ப ஆட்சியைக் கைப் பற்றிக் கொண்டான். இதுதான் கதை.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/323
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை