வீரவாகுவின் வீரச் செயல்கள் சொன்னார்; 305 கங்கைக் கரையில் இருந்த இராமகிருஷ்ணரும் சொன்னார். மனம் கரைந்தால் உள்ளத்தில் இறைவனைக் காணலாம் என்று அவர் சொன்னது பலகாலம் பல பேர்கள் அநுபவித்து உணர்ந்து சொன்னதன் எதிரொலியாகும். அன்னையின் திருமஞ்சனம் இன்னும் ஒரு கதை சொல்கிறேன். துர்வாச முனிவர் ஸ்ரீவித்தியா உபாசகர். அவரைக் குரோத பட்டாரகர் என்று சொல்வார்கள். ஸ்ரீ இராஜராஜேசுவரி ஸ்ரீபுரத்தில் எழுந்தருளியிருக் கிறாள். நவராத்திரி விழா எங்கும் நடந்தது. அதனால் அம்பிகைக்கு மிகவும் மகிழ்ச்சி. இந்தச் செய்தியை இந்திரன் கேள்வியுற்றான். மானிடப் பூச்சிகள் செய்கிற காரியத்தையே அம்பிகை பெரிதாக ஏற்றுக்கொண்டாளா? அப்படியானால் நாம் பூஜை செய்தால் அம்பிகை எவ்வளவோ சந்தோஷப்படுவாள்!' என்று நினைத்தான். உடனே அம்பிகையிடம் சென்று தான் ஒரு பூஜை செய்ய இருப்பதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று விண்ணப்பித்தான்; "எம்பெருமாட்டியே, நாளைக்கு என்னுடைய மண்டபப்படியை வைத்துக்கொள்ள வேண்டும்" என்று சொன்னான். அதற்கு அம்பிகை தனது சம்மதத் தைத் தெரிவித்தாள். மறுநாள் இந்திரன் அம்பிகைக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்தான். அப்போது துர்வாசர் பூவுலகத்திற்கு வந்திருந்தார். மறுநாள் அவர் தேவலோகத்திற்குச் சென்றபோது கூடை கூடையாகப் பலர் நிர்மால்யங்களைக் கொண்டு சென்றார்கள். "இங்கே என்ன பூஜை நடந்தது?” என்று துர்வாசர் கேட்க, "இது தெரியாதா? அம்பிகைக்கு இந்திரன் பூஜை செய்தான்" என்றார்கள். "அப்படியா !" என்று துர்வாசருக்கு வியப்பு உண்டாயிற்று. உடனே ஒரு கேள்வி கேட்டார்; " இந்திரனுக்கு என்ன வந்தது?" என்றார். இந்திரன் முதலிய தேவர்கள் காரணம் இல்லாமல் பூஜை செய்ய மாட்டார்கள். எத்தனையோ தலபுராணங்கள் இருக்கின்றன. பிரமன் பூஜை பண்ணின இடம், வாயு பூஜை பண்ணின இடம் என் றெல்லாம் தலங்கள் இருக்கின்றன. அப்படிப் பூஜை பண்ணினதற்குக் காரணம் இன்னது என்றும் சொல்லியிருப்பார்கள். இந்திரன் முதலிய தேவர்கள் செய்த பூஜைகள் எல்லாமே காமிய பூஜைகள். 39
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/325
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை