பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிறது. கடவுள் வாழ்த்து விநாயகம் காப்பு கந்தபுராணப் பாயிரப் பகுதி விநாயகர் காப்புடன் தொடங்கு திகட சக்கரச் செம்முக மைந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன் அகட சக்கர வின்மணி யாவுறை விகட சக்கரன் மெய்ப்பதம் போற்றுவாம். இது விகட சக்கர விநாயகர் துதி. (பாயிரம், 1.) கந்தபுராணத்தில் முருகப்பெருமான் திரு அவதாரம் வருகிறது. முருகப்பெருமான் வேறு; சிவபெருமான் வேறு அல்லர். ஐந்து முகம், பத்துக்கரங்களோடு உள்ளவன் பழைய பரமசிவன்; அவனே ஆறுமுகம், பன்னிரண்டு கைகளுடன் குமாரசிவமாகத் தோன்றினான். புராணக் கதையைச் சொல்லும் போது பூர்வகதையைச் சொல்வது வழக்கம். அவ்வாறு ஆறுமுகச் சிவனைப் பற்றிச் சொல்வதற்கு முன் ஐம்முகச் சிவனைப் பற்றிச் சொல்கிறார். திகழ் தசக்கரச் செம்முகம் ஐந்துளான். பத்துக் கரங்களையும், ஐந்து முகங்களையும் உடையவன் சிவ பெருமான். அந்த ஐந்து முகங்களாலும் 28 ஆகமங்களைச் சொன் னான் என்று புராணங்கள் கூறும். இறைவனுடைய ஐந்து முகங்கள் ஈசானம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்தியோசாதம் என்பவை. உச்சி முகம் ஈசானம்: கிழக்கு நோக்கியுள்ள முகம் ததபுருஷம்; தெற்கு கோக்கியுள்ள முகம் அகோரம்; வடக்கு நோக்கி யுள்ள முகம் வாமதேவம்; மேற்குத் திசை நோக்கியுள்ள முகம் சத்தியோசாதம். இந்த ஐந்து முகமுடைய சிவபெருமான் திரிபுர சங்காரம் செய்யப்போகும் போது பூமியைத் தேராகவும், சூரிய சந்திரனைச் சக்கரமாகவும் கொண்டு, பிரம்மா தேரை ஓட்ட எழுந்தருளினான்,