வீரவாகுவின் வீரச் செயல்கள் 313 அப்படிப் போனது எப்படி இருந்தது? அதற்கு மற்றோர் உவமை சொல்கிறார் கச்சியப்பர். மிகப் பெரிதாக இருக்கிற மலைகள் எல்லாம் உருத் தெரியாமல் போனதற்கு அந்த உவமை சரியாக இருக்கிறது. மிகப் பெரிய செல்வத்தை ஒருவன் அடை கிறான். அவனுக்குச் சொத்து லட்சக்கணக்கில் இருக்கிறது. அத்தனை செல்வத்தையும் அவன் அறநெறியில் அல்லாமல் தீய நெறியில் சம்பாதித்தான். அந்தச் செல்வம் எவ்வளவு பெரியதாக இருந்தாலும், எல்லாவற்றையும் மற்றவர்கள் எடுத்துக்கொள்ள, முடிவில் அவன் எல்லாம் இழந்து வறியவனாகவே ஆவான். அவனது எல்லாச் செல்வமும் பிறர் கொளப் போவதுபோல எல்லா மலைகளும் பொடியாயின' என்று உவமை சொல்கிறார். விறல்கெழு முயத்தி ஞான்மேல் விடுத்திடு கிரிகள் யாவும் வறிதுபட் டிலும் காணா மால்கரி முகத்தன் நின்றான்; அறநெறி ஒருவி மொய்ம்பால் ஆற்றிய வெறுக்கை யாவும் பிறர்கொள உகுத்தி யாதும் ஊதியம் பெறுகி லார்போல். (கயமுகன் வதை.89.) விறல் கெற புயத்தினான் வீரவாகு தேவர், வறிது பட்டிடலும் விணே அழியவும். கரிமுகந்தன் - கஜமுகங் . ஒருவி - நீங்கி. மொய்ம்பால் - வலிமையினால்.] அதன் பிறகு வீரவாகு தேவர் தம் வாளால் அவன் ஆயிரம் துதிக்கைகளையும் அரிந்தார். தன் அதிக்கைகளை இழந்த அந்த அசுரன் தன் கைகளால் வீரவாகு தேவரைப் பற்ற வந்தான்.அவன் கைகளையும் வெட்டி வீழ்த்தினார். ஆயுதம் ஏந்த முடியாதவனாக இருக்கிற அவனைத் தாம் ஆயுதம் கொண்டு தாக்கக்கூடாது என்று தம் தாளினால் அவன் மார்பை உதைத்தார். அப்படி உதைத்த வுடன் அவன் ஆ என்று கதறிக்கொண்டு கீழே விழுந்து உயிரை விட்டான். அவனுடைய மார்பிலிருந்து தோன்றிய இரத்த வெள்ளம் கடலில் போய்க் கலந்தது. உதைத்திடு கின்ற காலை ஒல்லென அரற்றி வீழ்ந்து மதத்தினை உறுக போல மால்கரி முகத்து வெய்யோன் பதைத்தனன், ஆவி சிந்திப் பட்டனன்; பகிர்ந்த மார்பில் குதித்திடு சோரி நீத்தம் குரைகடற் போய தன்றே. (க்யமுகன் வதை. 48.) [பகிர்ந்து பிளந்த. சோரி நீத்தம் - இரத்த வெள்ளம்.] 40
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/333
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை