பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314 கந்தவேள் கதையமுதம் வீரவாகு தேவர் அப்போது சிந்தித்தார்;'இன்னும் பலபேர்கள் வந்தால் அவர்களோடு போர் செய்துகொண்டிருந்தால் எடுத்த காரியம் விரைவில் நிறைவேறாதே!' என்று எண்ணி, உடனே அணு உருவத்தைக் கொண்டார். நொய்யதோர் அணுவின் ஆற்ற நுணுகியும் மேன்மை தன்னில் பொய்யில்சீர்ப் பெருமைத் தாயும் பூரண மாகி வைகும் செய்தோர் குமரன் பொற்றாள் சிந்தைசெய் தன்விற் போற்றி ஓய்யென அருளின் நீரால் ஓர் அணு உருவும் கொண்டான். (கயமுகள் வதை.53. [நொய்யது - இலேசானது. அணுவின் அணுவைப்போல் ஆற்ற- மிகவும். ஓய்யென - விரைவில், அருனின் மீரால் - முருகனது அருளின் தன்மையால்.] ஓர் அணுவின் உருவம் எடுப்பதற்கு முன்னால் முருகப்பெருமானை வீரவாகு தேவர் சிந்தித்தாராம். முருகன் அணுவுக்கும் அணு வாக, விபுவுக்கும் வியுவாக இருக்கிறான். நுண்ணியான் மிகப்பெரியான் " என்று ஞானசம்பந்தர் பாடுவார். வீரவாகு தேவர் தகரில் புகுதல் அப்படி அணுவுக்கு அணுவாக இருக்கிற எம்பெருமானை நினைத்து அணு உருவத்தை வீரவாகு தேவர் எடுத்தார். அந்த உருவத்தோடு வீரமகேந்திரபுரம் முழுவதும் சென்று எல்லா இடங்களையும் பார்த்தார். பார்த்தபோது அவருக்கே வியப்பு உண்டாயிற்று. நூற்றெட்டு அண்டங்களுக்கு அதிபதியாக இருந்த வன் சூரபன்மா. அந்த அண்டங்களில் என்ன என்ன அருமையான பொருள்கள் உண்டோ அவற்றை எல்லாம் கொண்டு வந்து இந்த வீரமகேந்திரபுரியில் குவித்திருந்தான். மற்ற மற்ற அண்டங்களுக்கு எல்லாம் போய்ப் பார்த்து எந்த எந்த அண்டத்தில் எத்தகைய அருமையான பொருள் இருக்கின்றன என்று பார்க்க வேண்டியதில்லை. அங்கங்கே உள்ளவற்றையெல்லாம் இங்கேயே பார்த்துவிடலாம். அவற்றைப் பார்த்தவுடன் வீரவாகு தேவருக்கு }