வீரவாகுவின் வீரச் செயல்கள் வீரவாகு தேவர் கண்ட காட்சிகள் 317 மகேந்திரபுரிக்குள் சென்ற வீரவாகு தேவர் ஒவ்வோர் இடமாகப் பார்த்து வந்தார். மடைப்பள்ளிக்குள் சென்றார். அங்கே தேவர்கள் சமையல் பண்ணிக்கொண்டிருந்தார்கள். வருண தேவன் அரிசியைக் களைந்துகொண்டிருந்தான். அக்கினி பகவான் அந்த அரிசியோடு மாமிசத்தையும் பக்குவம் பண்ணிக்கொண்டிருந்தான். இப்படித் தேவர்கள் எல்லாம் அசுரர்களுக்காக உணவு ஆக்கிக் கொண்டிருந் தனர். அந்த உணவைத் தேவமகளிர் பரிமாற, அசுரர்கள் உண்டார்கள். துய்ய வால்அரி புனற்கிறை மண்ணியே தொகுப்பச் செய்ய தீயவன் ஊன்களோ டவைபதம் செய்ய மையல் மாதரோ டவுணர்கள் ஆரம்பையர் வழங்க நெய் அளா வுண்டி உண்குவர் மறுசிகை நீக்கி. (நகர் புகு.29.) [வால் அரி -வெள்ளை அரிசியை. புளற்கு இறை -வருணன். மண்ணி கழுவி. தீயவன் - அக்கினி. பதம் செய்ய - சமைக்க, அரம்பையர் - தேவமாதர். மறு சிகை அடுத்த பிடி.] - மறுசிகை நீக்கி உண்குவர். என்று இங்கே வருகிறது. துரியோதனனைப் பற்றிச் சொல்லும் போது, EL தன்னச்சில் தான்உண்ணத் தன்மையான்" - என்று சொல்வார்கள். ஒரு தட்டில் உள்ள உணவை ஒரு பிடி எடுத்துச் சாப்பிட்டால் மிச்சம் இருப்பது அவனது எச்சில், அதை அவன் சாப்பிடமாட்டான். இன்னும் ஒரு பிடியை வேறொரு தட்டி லிருந்துதான் எடுத்துச் சாப்பிடுவான். அது அவனது வள வாழ்வுக்கு அடையாளம். அப்படி ஒரே தட்டில் இரண்டாவது பிடியை எடுக்காமல் அசுரர்கள் உண்டார்கள். மகேந்திரபுரியில் உணவுத் தட்டுப்பாடே இல்லையாம். கல்யாணத்தில் ஜானவாசம் என்று முதல் நாள் ஒரு விழா நடக்கும். அதில் மாப்பிள்ளை அழைப்பு நடைபெறும். மாப்பிள்ளை மாத்திரம் ஒரு காரில் ஏறி உட்காருவார். அந்தச் சமயத்தில் அவரவர்கள் தங்கள் தங்கள் குழந்தைகளையும் அந்தக் காரில் உட்கார வைப்பார்கள்.
கச்சியப்பர் சொல்கிறார். அதுபோல இங்கே ஒரு காட்சியைக்