14 கந்தவேன் கதைமுதம் (சகடம்- அப்போது சகடத்தின் சக்கரமாக இருந்தவன் சூரியன். தேர்.) தாமரையை மலரச் செய்பவன் சூரியன். ஆகவே அவனைத் தாமரை நாயகன் என்று சொல்வது வழக்கம். பத்துக் கைகளையும், ஐந்து முகங்களையும் உடைய சிவபெருமான் திரிபுர சங்கார காலத்தில் செலுத்திய திருத்தேரின் சக்கரமாக அமைந்தவன் சூரியன் ஆகிய தாமரை நாயகன், திகழ் தசக்கரச் செம்முகம் ஐந்துளான் சகட சக்கரத் தாமரை நாயகன். விநாயகப் பெருமான் ஒரு சமயம் விசுவரூபம் எடுத்தார். அந்தத் திரு உருவத்தை நமக்குக் காட்டுகிறார் கச்சியப்ப சிவாசாரி யார். எப்படிக் காட்டுவது? இவ்வளவு அடி உயரம் என்று அளந்து காட்ட முடியாது. அதனை ஒரு வகையில் நமக்குப் புலப் படும்படியாகச் செய்கிறார். சூரிய மண்டலம் எல்லாவற்றையும்விட மேலே இருப்பது. அதற்குக் கீழேதான் சந்திர மண்டலம் இருக்கிறது. விநாயகப் பெருமான் சூரிய மண்டலத்திற்கும் மேலே வளர்ந்திருக்கிறார். சூரியன் அவரது இடுப்புக்கு நேராக இருக்கிறான். விநாயகப் பெருமான் தம் இடுப்பில் உதரபந்தனமாக-பெல்ட்டைப் போல- நாகப்பாம்பை அணிந்திருக்கிறார். அந்த நாகப்பாம்பை இடுப்பைச் சுற்றிக் கட்டி ஒரு முடி போட்டிருக்கிறார். நாகப்பாம்பின் தலை அவரது இடுப்பில் எடுப்பாய் இருக்கிறது. அந்தப் பாம்பின் வாய்க்குப் பக்கத்தில் சூரியன் இருக்கிறான். விநாயகப் பெருமான் அவ்வளவு உயரமாக வளர்ந்திருக்கிறார். அப்போது தாமரை நாயகனாகிய சூரியன் விநாயகப் பெருமான் இடையில் கட்டியிருக்கிற நாகப்பாம்பின் வாயில் உள்ள மாணிக்கத்தைப்போல் ஒளிவிடுகிறான். தாமரை நாயகன் அகடு அசக்கு அரவின் மணியா உறை • என்று சொல்கிறார் கச்சியப்ப சிவாசாரியார் 'சூரியன்,வயிற்றிலே உதர பந்தனமாகக் கட்டிய பாம்பின் மாணிக்கம் போலத் தங்குகிற' என்பது பொருள்,
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/34
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை