பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/341

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீரவாகுவின் வீரச் செயல்கள் 321 சயந்தன் இந்திராணியினுடைய புதல்வன். சசி என்பது அவளுக்கு ஒரு பெயர். அந்தச் சசியினுடைய நெற்றி சந்திரனைப் போல வளைந்திருக்கிறது. சசி என்பது சந்திரனுக்கும் பெயர். சசம் என்பது முயல். முயல் போன்ற கறையை உடையவனாகை யால் சசி என்ற பெயர் அவனுக்கு வந்தது. அந்தச் சந்திரன் பாற்கடலில் தோன்றியவன். பாற்கடல் திருமாலின் படுக்கையாக உள்ள இடம். திருமால் பரமேசுவரனுக்கு அம்பாக இருந்தவர்; முப்புரங்களைச் சிவபெருமான் எரித்தபோது அவன் கையில் அம்பாக இருந்தார் திருமால். இவ்வளவையும் நினைத்து ஆசிரியர் பாடுகிறார். பரமேசுவரனுடைய அம்பாகிய திருமால் படுத்திருந்த பாயலாகிய பாற்கடலில் தோன்றிய சந்திரனைப் போன்ற நுதலை உடைய இந்திராணி பெற்ற குமாரனாகிய சயந்தன் சிறையில் இருந்தான் என்று சொல்கிறார். பரஞ்சுடர் நெடுங்கணை படுத்த பாயலில் வரும்சி அனையதோர் வாணு தல்சசி தரும்சிறு குமரனாம் சயந்தன் அவ்விடை அரும்சிறை இருந்தனன் அமரர் தம்மொடும். [பரஞ்சுடர்-சிவபெருமான். சயந்தன் புலம்புறு. 1.) கூனை - இங்கே திருமான், பாயல் பாற்கடல். வரும் சசி - தோன்றிய சந்திரன். சகி தரும் - இந்திராணி பெற்ற) அரக்கர்கள் கரிய நிறம் சயந்தன் கறுப்பு நிறம் உடையவன். உடையவர்கள். தேவர்கள் ஒளி உடைய திருமேனி உடையவர்கள்; தேஜோமயமான உடம்பு உடையவர்கள் அவர்கள். எங்கும் கரிய அசுரர்கள் சூழுகின்ற இடத்தில் ஒளி படைத்த திருமேனியை உடையவர்களாகிய தேவர்களுக்கு நடுவில் கரிய நிறம் படைத்த சயந்தன் இருந்தான். பல கரிய நாகங்கள் கவர்ந்து செல்ல, அதனால் சோர்வை அடைந்த பெரிய சந்திரனுக்கு நடுவில் முயல் இருப்பதைப் போலச் சயந்தன் இருந்தானாம். அசுரர்களுக்கு நாகங் களும், தேவர்களுக்குச் சந்திரனும், சயந்தனுக்கு முயலும் உவமை. மழைபுரை அணர்சூழ் வைப்பில் வால்ஒளி தழுவிய அமரருள் சயந்தன் மேயினான், கழிகரு பணிபல சுவரச் சோர்தரும் முழுமதி யதனிடை முயலுற் றென்னவே. [மழைபுரை கரிய நிறத்தால் மேகத்தை ஒத்த " வாலொளி - வெண்ணிதம். பணி-நாகம்.1 (சயந்தன் புலம்புறு. 3.) வைப்பில் - இடத்தில் 41