322 கந்தவேள் கதையமுதம் மேலும் ஓர் உவமை சொல்கிறார் ஆசிரியர். நல்ல மரகத மணி யைச் சானையிட்டு அதனால் ஒரு பொம்மை செய்கிறார்கள். அது அழுக்கு அடைந்தால் எப்படி இருக்கும்? அப்படி இருந்தானாம் சயந்தன். நீலோற்பல மலர் மாலை வாடிப்போனால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தான் என்று மற்றோர் உவமையும் கூறுகிறார். தேவியல் மாகதம் தெளித்துத் தீட்டிய ஓவிய உருவம்மா சுண்ட தன்மையான்; ஆவியம் புனலரு தமரும் காவியம் பூஇயல் மென்தொடை புலர்ந்த தேஅனான். சயந்தன் புணம்புரி, 8.) [தெளித்து - சாணையிட்டு. ஓவிய உருவம் - சித்திரப் பதுறை. ஆவி -வாவி. காவி அம்பூ - றீலோற்பல மலர். தொடை -மாலை. புலர்ந்தது - வாடியது.] அவன் தன்னுடைய பழைய நலத்தை நினைத்துப் பார்த்தான். சயந்தன் கற்பக நிழலில் வளர்ந்தவன்; இப்போது அசுரர்களுடைய சிறையில் கிடந்தான். அந்தப் பழைய நிலை நினைவுக்கு வந்தது. அவன் படுக்கிற படுக்கை மெத்தென இருக்கும். அதில் மலர்களை விரித்திருப்பார்கள் ; அதில் படுப்பான். இப்போதோ கட்டாந் தரையில் படுத்திருக்கிறான். அங்கே பெண்கள், அவனுக்கு வேண்டிய உபசாரங்களைச் செய்வார்கள். எப்போதும் மகிழ்ச்சி யோடு இருப்பான். அங்கே இந்திர போகம் நிரம்பியிருந்தது. எல்லாப் போகங்களுக்கும் மேலானது இந்திர போகம் என்று சொல்வார்கள். இப்போது இங்கே சிறையில் வாடுகிறான். ஐந்தரு நிழலை நினைக்கும்; ஆய்மலர் தந்தமென் பள்ளியை உன்னும்; தானெளப் புந்திகொள் மங்கையர் புணர்ப்பை உட்கொளும்; இந்திரப் பெருவளம் எண்ணிச் சோருமே. (சபந்தன் புலம்புறு.15.) (ஐந்தது-ஐய்து வகையான கற்பக மரங்கள். ஆய்மலர் - ஆய்ந்தெடுத்த மலர்கள், பள்ளி - படுக்கை- தான் ன - தன்னைப் போலவே. புந்திகொள் - அவனைச் சேரும் எண்ணத்தைக் கொண்ட.) 'என்னுடைய தகப்பனார் எங்கே போனாரோ? சூரபன்மன் செய்கிற காரியங்களை இறைவனிடத்தில் சொல்வதற்காகக் கைலாச மலைக்குப் போனாரோ?' என்று எண்ணினான்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/342
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை