கடவுள் வாழ்த்து 15 விநாயகப் பெருமானை விகட சக்கரன் என்று சொல்கிறார். காஞ்சிபுரத்தில் எழுந்தருளியிருக்கிற விநாயகருக்கு விகட சக்கர விநாயகர் என்று பெயர். தக்கன் யாகம் செய்தபோது சிவபெருமானை அழையாமல் செய்தான். அதனால் சிவபெருமான் வீரபத்திர தேவரை உண் டாக்கித் தக்க யாகத்தை அழிக்கும்படி விடுத்தான். அப்போது திருமால் தம் சக்கராயுதத்தை வீசினார். அதை வீரபத்திரக் கடவுள் அணிந்திருந்த வெண்தலை ஒன்று கவ்விக் கொண்டது. சக்கரப் படை இல்லாமல் திருமால் தவித்தார். அவர் தமது சேனாதிபதி யாகிய விஷ்வக்ஸேனரை அனுப்பி அந்தச் சக்கரத்தை மீட்டுவரச் சொன்னார். விஷ்வக்ஸேனர் வீரபத்திர தேவர் முன் வந்து கோமாளிக் கூத்து ஆடினார். அந்தக் கூத்துக்கு விகடக் கூத்து என்று பெயர். அப்படி ஆடும்போது எல்லோரும் நகைத்தார்கள். வெண்தலை மாலையும் நகைத்தது. அப்போது அதன் வாயில் இருந்த சக்கரம் கீழே நழுவி விழுந்தது. அந்தச் சக்கரத்தை விநாயகப் பெருமான் எடுத்து வைத்துக்கொண்டார். இவரிட மிருந்து அதை வாங்குவதற்கு என்ன வழி? என்று விஷ்வக்ஸேனர் எண்ணினார். விநாயகப் பெருமானோ அதே விகடக் கூத்தைத் தம் முன்னே ஆடவேண்டுமென்று கேட்டார். அப்படியே விஷ்வக் ஸேனர் ஆட, அந்தச் சக்கரத்தை அவர் கையில் கொடுத்தருளினார். விகடக் கூத்து ஆட, சக்கரத்தைக் கொடுத்ததனால் இவருக்கு விகட சக்கர விநாயகர் என்ற திருநாமம் வந்தது. இது காஞ்சிப் புராணத் தில் வருகிற கதை. 6 ஏக்கறவா னவன் இயற்றும் விகடநடம் நெடும்போதெம் பெருமான் நோக்கி மாக்கருணை சுரந்தருளி ஆழிஅவன் றனக்களித்தான்; வரத்தால் மிக்கீர், போக்கறும் இக் காரணத்தால் அன்றுமுதல் காஞ்சியின் அப் புழைக்கைத் தேவை ஊக்கமுறும் திறல்விகட சக்கரவி நாயகனென் றுலகம் கூறும்." [வானவன் - விஷ்வக்ஸேனர். பெருமான் - விநாயகர்.ஆழி - சக்கரம். போக்கு- குற்றம், புழைக்கைத் தேவு-விநாயகர்.]
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/35
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை