வீரவாகுவின் வீரச் செயல்கள் 333 சயந்தனோ, " என்னுடைய தாய் தந்தையர் அமராவதிப் பட்ட ணத்தை வீட்டுப் புறப்பட்டதைத்தான் நான் அறிவேன். அவர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள் என்பது தெரியாது. எனக்குத் தெரிந்தால்தானே சொல்ல முடியும்?" என்றான். என்னும் காலைக் கேட்ட சயந்தன் எம்ஆயும் மன்னும் வான்நின்று ஓடின கண்டோம்; மற்றன்னார் பின்அங் குற்ற தன்மையும் ஓராம்; பிணிநோயுள் துன்னும் தீயேம் யாவது உரைத்தும், சூழ்ந்தென்றான். (சபந்தன் புலம். 45.) [ஆயும்- தாயும். உறைத்தும் - சொல்வோம்.] அவர்களிடமிருந்து உண்மையை வருவிக்க வேண்டுமென்று காவலர் கள் அவர்களை மிகவும் துன்புறுத்தினார்கள். சயந்தனும் தேவர் களும் துன்பம் தாங்கமாட்டாமல் சிவபெருமானை நினைந்து வேண்டி னார்கள். மன்னும் - இந்திரனும். ஓரம் - தெரிந்துகொள்ளவில்லை. L பல வகையான ஆயுதங்களினால் காவலர்கள் அவர்களைத் துன் புறுத்தினார்கள். ஆயுதங்கள் மழுங்கிப்போயின. காவலர்களுடைய கைகளும் நோகத் தொடங்கின. இவர்களுக்குச் சாவு கிடையா யாதோ? அம்ருதத்தை உண்டவர்களோ? நாம் இவ்வளவு கொடுமை இழைத்தும் இவர்கள் அந்த அளவுக்கு அல்லல்பட வில்லையே ! இது என்ன அற்புதம்?' என்று அந்தக் காவலர்களே எண்ணி வியந்தார்கள். சயந்தனோ, "சிவபெருமானே, நாங்கள் படுகிற அல்லல் போதா தா? நாங்கள் படுகிற துன்பங்களை நீ உணரவில்லையா?" என்று சிவனை நினைந்து வருந்தினான். கங்கை முடித்தாய், கறைமிடற்றாய், கண்ணுதலாய், திங்கள் புனைந்தால், சிவனே சிவளேஎன்று இங்கு நினதுஅடியேம் எல்லேங் களும்அரற்றல் நங்கள் உயிர்க்குயிராம் நாயகநீ கேட்டிலையோ? (சயந்தன் புவம்புறு.60.) [கறைமிடற்றாய் - நஞ்கினால் உண்டான கறுப்பையுடைய கழுத்தை உடையவனே. எல்வேங்கள் - நாங்கள் எல்லாம்.] அடியார்களுக்கு இரங்கி இறைவன் கங்கையை ஏற்றுச் சடை யில் தரித்தான். தேவர்களுக்கு இரங்கி ஆலகால விஷத்தைக்
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/353
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை