வீரவாகுவின் வீரச் செயல்கள் 335 செய்கிறான்? பலருக்குச் செய்வதில்லையே!' என்ற கேள்விவரலாம். வேண்டியவர்களுக்குக் கொடுத்து, வேண்டாதவர்களுக்குக் கொடுக் காமல் இருக்கிற பட்சபாதம் உடையவன் அவன் என்று சொல்ல முடியுமா? உண்மையில் ஆண்டவனைப் போன்ற அருளாளர் யாரும் இல்லை. அவன் எல்லோருக்கும் அருள் செய்து கொண்டிருக்கிறான்.பக்குவ ஆன்மாக்கள் சிறந்த அருளைப் பெறுகின்றன. இறைவனது அருளைப் பொதுவானது, சிறப்பானது என்று இரண்டு வகைப் படுத்தலாம். எல்லோருக்கும் தனு கரண புவன் போகங்களை அளித்திருக்கிறானே, இது பொதுவான அருள். அவன் அளிக்கிற சிறப்பான அருளைப் பக்குவ ஆன்மாக்கள் பெறுகின்றன. ப ஒரு நாள் மழை பெய்தது. மழை நீரை ஏந்தி வைத்துக் கொள்ள வேண்டுமென்று ஒரு பெண்மணி நினைத்தாள். தன்னுடைய பெண்ணைக் கூப்பிட்டு உள்ளே வைத்திருக்கும் பாத்திரத்தைக் கொண்டு வந்து முற்றத்தில் வைக்கச் சொன்னாள். அந்தப் பெண்ணும் அதைக் கொண்டுவந்து வைத்தாள். ஒரு மணி மழை பெய்தது. மழை நின்ற பிறகு சென்று பார்த்தால் பாத்திரத்தில் ஒரு சொட்டுத் தண்ணீர் தேங்கவில்லை காரணம் என்ன ? அறைக் குள்ளே பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்திருந்தார்கள். அந்தப் பெண் அப்படியே எடுத்து வந்து முற்றத்தில் கவிழ்த்து வைத்து விட்டாள். மழை பெய்தாலும், பாத்திரம் நன்றாக இருந்தாலும், அது கவிழ்த்து வைக்கப்பட்ட காரணத்தினால் அதில் தண்ணீர் ஒரு சொட்டுக் கூடத் தேங்கவில்லை. இறைவன் எல்லோருக்கும் தனு கரண புவன போகங்களைக் கொடுத்திருக்கிறான். ஞானசம்பந்தருக்குக் கொடுத்ததைப்போலவே, ஆழ்வார்களுக்குக் கொடுத்ததைப் போலவே, நமக்கும் கொடுத் திருக்கிறான். நாம் நமது மனத்தை இறைவனை நோக்கிச் செலுத் தாமல், பிரபஞ்சத்தை நோக்கிச் செலுத்திக்கொண்டிருக்கிறோம். ஆகவேதான் அவன் திருவருள் பதிவை நம்மால் உணர முடிய வில்லை. அவன் பட்சபாதமின்றி எல்லோருக்கும் அருள் செய்கிறான் என்றாலும் அவரவர்களுடைய பக்குவத்திற்கு ஏற்றபடி தான் அநுபவம் அமைகிறது.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/355
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை