பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/358

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

338 கந்தவேள் கதையமுதம் அதைக் கேட்டவுடன் சயந்தனுக்கு மகிழ்ச்சி உண்டாயிற்று. புளகம் போர்த்தது. கண்ணிலிருந்து நீர் வழிந்தது. "எம்பெருமானே, விரைவில் வந்து காத்தருள வேண்டும்" என்று பிரார்த்தித்தான். உடனே விழித்துக்கொண்டான். அந்தச் சமயத்தில் தேவர்களுக்கும் அத்தகைய கனவு உண்டாயிற்று. வீரவாகு தேவர் சயந்தனைக் கண்டு தேற்றுதல் வீரவாகு தேவர் சிறைக்குள்ளே நுட்பமான உருவத்துடன் சென்று சயந்தன் இருக்கிற இடத்தை அடைந்தார். முருகனுடைய மந்திரம் சொல்ல, அதனால் காவல் இருந்த அசுரர்கள் மயக்கம் அடைந்தார்கள். அந்தச் சமயத்தில் விரவாகு தேவர் புகுந்தார். சித்திரத்தில் இருக்கிறவர்களைப் போல அங்கே உள்ள காவலர்கள் எல்லாரும் செயலிழந்திருந்தார்கள். வீரவாகு தேவரை ச்சயந்தனும், தேவர்களும் பார்த்து, இவர் யார் என்று யோசனை பண்ணினார்கள். ஓங்கார மூலப் பொருளாய்உயிர் தோறும் என்றும் நீங்காது ஆமரும் குமரேசனை நெஞ்சில் உன்னி ஆங்கா குவதுஓர் அவன்மந்திரம் அன்பின் ஓதித் தீங்கரம் அவுணர் செறிகாப்பகம் சென்று புக்கான். எண்தா னவரில் புடைகாப்பவர் யாகும் மையல் கொண்டார் குயிற்றப் படும்ஓவியக் கொள்கை மேவத் தண்தார் அயில்வேல் படை நாயகன் தானை வேந்தைக் கண்டார், சயந்த னொடுதேவர் ; கருத லுற்ஞர். (வீரவாகு சயந்தனைத் தேற்று-4.6.} (காப்பகம் - காவற்கூடம்; சிறை. தானவரில் - அசுரர்களில். புடைகாப்பவர் அருகிலிருந்து காவல் புரிபவர்கள். மையல் - மயக்கம். குயிற்றப்படும் - அமைக்கப் படும். தானைவேந்து - படைத்தலைவராகிய வீரவாகு தேவர்.] வீரவாகு தேவர் முருகனுடைய திருநாமத்தைச் சொல்லி உள்ளே புகுந்தார். " இங்கே அநுமன் செயல் நினைவுக்கு வருகிறது. அசோக வனத்தில் சீதாபிராட்டி இருந்தாள். அவளைச் சுற்றி நிறைய அரக்கி கள் காவலாக இருந்தார்கள். அநுமன் அசோக வனத்தை அடைந் தவுடன் ஒரு மந்திரம் சொல்லி அரக்கியர்களை மயங்க வைத்தான்.