வீரவாகுவின் வீரச் செயல்கள் 339 அவர்கள் மயங்கி இருக்கும் போது சீதாபிராட்டியை அணுகினான். சீதை அநுமனை முன்னர்ப் பார்த்தது இல்லை. அவளுக்கு அவன் யார் என்று சந்தேகம் வந்தது. அரக்கர்களைச் சேர்ந்தவனாக இருப்பானோ,தன்னைத் துன்புறுத்த வருகிறானோ என்று அஞ்சினாள். அனுமன் இராம நாமத்தைச் சொல்லிக்கொண்டு வந்தான். சீதா பிராட்டி அந்த நாமத்தைக் கேட்டவுடன் கிளர்ச்சி கொண்டாள். முதலில் சந்தேகித்தாலும் இராமநாமத்தைச் சொன்னதால் தெளிவு உண்டாயிற்று. அரக்கனே ஆக | வேறோர் அமரனே ஆக! அன்றிக் குரக்கினத் தலைவ னேதான் ஆகுக! கொடுமை ஆக! இரக்கமே ஆக! வந்திங்கு எம்பிரான் நாமம் சொல்லி ருாக்கினன் உணர்வைத் தந்தான்; உயிர்இதின் உறுதி உண்டோ?" [கம்பராமாயணம் ) என்று எண்ணி அனுமனோடு பேசத் தொடங்கினாள். இங்கே வீரவாகு தேவர் முருகனுடைய திருநாமத்தைச் சொல்லி உள்ளே புகுந்தார். செறிகின்ற ஞானத் தனிநாயகச் செம்மல் நாமம் எறிகின்ற வேலை அமுதின்செவி ஏசு லோடும் மறிகின்ற துள்பிற் சயந்தன்மகிழ் வெய்தி முன்னர் அறிகின் றிலன்போல் தொழுதுஇன்ன அறைத லுற்றன். (வீரவாகு சயந்தனைத்.9) [செம்மல் முருகனுடைய எறிகின்ற - அலை விளகிள்த. அமுதின் - அமுதத் தைப் போல. மறிகின்ற நுள்மீன் - இறந்ததற்கு ஒப்பாகிய துன்பத்தை உடைய.] 6.5 அந்தத் திருநாமம் அமுதத்தைப் போலச் சயந்தனுடைய காது களில் புகுந்தது. "தேவரீர் யார்?" என்று சயந்தன் கேட்க, முருகப் பெருமானுடைய தூதுவன் நான்" என்று வீரவாகு தேவர் சொன்னார். அதைக் கேட்டவுடன் சயந்தனுக்கு மிகவும் மகிழ்ச்சி உண்டாயிற்று. முருகப் பெருமான் கனவில் சொன்ன செய்திகள் அவள் தினைவுக்கு வந்தன. தம்முடைய தவத்தினால் சந்திர மண்டலத்தி லுள்ள அமுதத்தை நுகர்ந்த யோகிகள் பாற்கடலில் பிறந்த அமுதத் தையும் பெற்று உண்டால் எப்படி மகிழ்ச்சி அடைவார்களோ, அது. போல் முடிவு இல்லாத மகிழ்ச்சி அடைந்தான்.
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/359
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை