பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/362

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

342 கந்தவேள் கதையமுதம் சாக்கடையில் மோதிரம் விழுந்துவிட்டது. அதை எடுக்க வேண்டுமானால் சாக்கடையில் கையை விடத்தான் வேண்டும். கை அழுக்காகிவிடுமே என்று எண்ணினால் மோதிரத்தை எடுக்க முடியுமா? அந்த அழுக்கைக் கொஞ்சம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அப்படி வீரவாகு தேவர், "சாக்கடையில் கிடக்கிற உங்களைக் காண நான் வந்திருக்கிறேன்; உங்களைப் பார்த்தவுடன் உவகை பூத்தேன்" என்று சொன்னார். பின்பு முருகப்பெருமான் வரலாறு முதலியவற்றைச் சொன்னார். முருகப்பெருமானுடைய பெருமையை எல்லாம் எடுத்துக் காட்டினார். "எவன் தனக்குச் சமானமாக யாருமின்றித் தானே மேலானவனாக இருக்கிறானோ, பரஞ் சோதியாக இருக்கிறானோ, மனத்திற்கும் வாக்குக்கும் எட்டாத பராபரமாக இருக்கிறானோ, அவன் முருகப்பெருமானாக, ஆறு திரு முகம் உடைய குழந்தையாக, பன்னிரு திருக்கரங்கள் உடைய வனாகக் கந்தன் என்ற பெயரோடு யாவரும் காண வந்தான்" என்றார். தன்நிகர் இன்றி மேலாய்த் தற்பர ஒளியாய் யாரும் உன்னரும் பரமாய் நின்ற ஒருவனே, முகங்கள் ஆறும் பன்னிரு டியமும் கொண்டு பாலகன் போன்று சுந்தன் என்னும்ஓர் பெயரும் எய்தி யாவரும் காண வந்தான். (பரமாய் - மேலான பொருளாய்.] (வீரவாகு சயந்தனை.23.1 முருகப்பெருமான் அநாதிகாலமாக இருக்கிற பராபரன் என்று வீரவாகு தேவர் சொன்னார். ஐந்து முகக் கடவுள் தன்னுடைய பரம் கருணையினாலே ஆறுமுகக் கடவுளாக வந்தான் என்று முன்பு சொன்னதைப் பார்த்தோம். மறைந்திருந்த ஒருவன் மேடையில் தோன்றினாற் போல முருகன் வந்தான். அவன் என்றும் இருப்ப வன். புதியவனாகித் தோன்றினான் என்றால் அது தோற்றம். தோற்றம் உண்டானால் மறைவும் உண்டு. இவன் அழிவற்றவனாதலால் இவன் திடீரென்று புதியவனாகப் பிறந்து வரவில்லை. மற்ற அவதாரங் களுக்கும் இதற்கும் வேறுபாடு உண்டு. மறைந்திருந்த பொருள்