பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/366

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346 கந்தவேள் கதையமுதம் சூரன் வச்சிரக் கம்பத்தில் ஏறி வீழ்ந்து உயிரை விட்டான். அவனைப் போல் தவம் செய்தவர்கள் யாரும் இல்லை, குவிருக்கும், வெப்பத்திற்கும் அஞ்சாமல் தவம் செய்தவர்கள் உண்டு. ஆனால் உயிரைப் பணயம் வைத்துத் தவம் செய்தவர்கள் யாரும் இல்லை. அத்தகைய அரிய தவத்தைச் செய்தவன் சூரன். அதனால் வேறு யாருக்கும் கொடுக்காத பதவியைச் சிவபெருமான் அருளினான். இங்கே, 'இத்தனை தவம் செய்தவன், அந்தத் தவத்தின் பயனாகப் பெரிய சிறப்புகளைப் பெறுகிறான். நல்ல பதவியில் இருக் கிறான். அப்படி இருக்கும் போது அவனுக்கு எதற்காகக் கேடு வரவேண்டும்?" என்ற கேள்வி எழும். அதற்குக் கச்சியப்ப சிவசாரியார் விடை சொல்கிறார். குருவிகள் மரத்தின்மேல் கூடு கட்டியிருக்கும். இராத்திரியில் கூட்டுக்குள் விளக்கு வைக்க வேண்டும் அல்லவா ? அதற்காக மின் மினிப் பூச்சியைக் கொண்டு போய் வைக்கும். ஒருநாள் ஒருவன் குடித்துவிட்டுப் போட்ட சிகரெட்டுத் துண்டை - அது நுனியில் நெருப்புடன் இருக்கும் இருக்கும் அல்லவா?- மின்மினிப் பூச்சி என்று எண்ணிக் கூட்டிற்கு எடுத்துக் கொண்டு போய் வைத்தது. கூடு முழுவதும் எரிந்து விட்டது. நாம் நம்முடைய குழந்தைக்கு மெத் தென்று இருப்பதற்குத் தொட்டிலில் போடுவனவற்றை விட மெ மையான பொருள்களைக் கொண்டு போய்க் குருவி கூட்டில் வைக்கும். எரிவதற்குரிய பொருள்கள் அங்கே இருக்கும். அந்தக் குருவி தன்னுடைய கூடும் குஞ்சும் அழிவதற்குரிய நெருப்புத் துண் டைத் தானே கொண்டு போய்த் தன் கூட்டில் வைத்துக்கொண்டது போல, இங்கே சூரன் தன்னுடைய குலத்தினரும் தானும் அழியும் படி தேவர்களைக் கொண்டுபோய்ச் சிறையில் வைத்தான். அதனால் தான் அவனுக்குக் கேடுகாலம் நெருங்கியது. இவ்வாறு கச்சியப்பர் உபமானம் சொல்கிறார். அவர் சிகரட்டைச் சொல்லவில்லை; கொள்ளியைச் சொல்கிறார். மெய்ச்சோதி தங்கு சிறுகொள்ளி தன்னை விரகின்மை கொண்ட குருகார் கச்சோதம் என்று கருதிக் குடம்பை தனின்உய்த்து மாண்ட கதைபோல் அச்சோ எனப்பல் இமையோரை ஈண்டு சிறைவைத்த பாவம் அதனால் இச்சூர பன்மன் முடிவெய்தும் நாளை: இதனுக்கோர் ஐயம் இலையே. (அவை புகு.48.) (விரகு இன்மை - தந்திரம் அறியாமல், குருகார்-குருவி; பள்மை, இழிவுக் குறிப்பு. கச்சோதம் - மின்மினிப் பூச்சி, குடம்பை - கூடு. அச்சோ -ஐயோ.]