கடவுள் வாழ்த்து 17 ஆறு முகங்களும் மலர்களைப்போல மலர்ந்திருக்க, அந்த முகங்களி லிருந்து தேனைப்போலக் கருணை சுரக்கிறது. ஆகவேதான், மூவிரு முகங்கள் போற்றி! முகம்பொழி கருணை போற்றி! என்று சொன்னார். இறைவன் திரு அவதாரம் செய்தது கருணையினால். கருணைகூர் முகங்க ளாறும் கரங்கள்பன் னிரண்டும் கொண்டே ஒருதிரு முருகன் வந்தாங் குறித்தளல் உலக முய்ய என்று பின்னாலே சொல்லப் போகிறார். அப்போது பார்க்கலாம். (இருவவதாரம், 02.) தனுடைய உள்ளுறையை உலகம் எல்லாம் உய்ய வேண்டிக் கருணை சுரந்து ஆண்டவன் திரு அவதாரம் செய்கிறான். அந்தக் கருணை மிகுதியையே ஆறு முகங்களும்,பன்னிரண்டு திருக்கரங்களும் காட்டுகின்றன. அப்படி எழுந்தருளிய முருகப் பெருமான் உலகத்திற்கு நலம் உண்டாக வேண்டிச் சூரபன்மாவைச் சங்காரம் செய்கிறான். அந்தச் சங்காரம் செய்வதற்கு அந்தப் பெருமானுடைய வீரம் உதவுகிறது. வீரத்தைப் புலப்படுத்துவது தோள். முருகனுடைய வீரத்தின் விளைவே கந்த புராணத்தின் பயன், அதைச் சொல்வார்போல, என்றார். ஏவரும் துதிக்க நின்ற ஈராறு தோள் போற்றி! ஆறு முகங்களைச் சொன்னதனால் அவதாரத்தையும், தோளைச் சொன்னதனால் வீர விளையாட்டையும் நினைவூட்டினார். ஆகையால் கந்தபுராணத்தின் முதலையும், முடிவையும் சொன்னது போல ஆகிவிட்டது. அடுத்து இறைவன் மாவடி அமர்ந்திருத்தலைச் சொல்கிறார். காஞ்சி மாவடி வைகும் செவ்வேள் மலரடி போற்றி! முருகப்பெருமானை 'மாவடி வைகும் செவ்வேள்' என்று சொல்கிறார். மாமரத்தின் அடியில் எழுந்தருளி இருப்பதனால் சிவபெருமானை மாவடி என்றே சொல்வார்கள்; ஏகாம்பரநாதன் என்று வழங்கு வார்கள். முருகப்பெருமான் வேறு, சிவபெருமான் வேறு அல்லராதலால், "மாவடி வைகும் செவ்வேள் "என்றார். 3
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/37
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை