பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$52 கந்தவேள் கதையமுதம் ரைசெய் இந்நகர் மகளிரும் செய்வர்; ஊன் முற்றாக் கருவின் உள்ளுறு குழவியும் செய்திடும்; கருத்தில் வரைக ளும்செயும்; மாக்க ளும்சொரம்; மற்று அதனால் அரியது அன்றுஅரோ, பேதைநீ புரிந்திடும் ஆடல். (கரு - கர்ப்பம். (அவை புகு. 89.) வரைகள் மலைகள். மாக்களும் - விலங்குகளும்.) மாபெரும் சித்தர்களை இழித்துச் சொன்னான் ; சிற்றுணர்ச்சியோர் வல்ல சித்து இயல்பு இது என்றான். உள்ளத்தில் உதைப்பு இருந்தாலும் வார்த்தையில் அது தெரியாமல் மிகவும் இழித்துப் பேசினான். "இந்தச் சித்துக்களை யாரும் செய்யலாம் இது பைத்தியக் காரன் செய்கிற காரியம் அல்லவா ? இதை நீ கற்றுக்கொண்டிருக் கிறாய். அதை என்னிடம் காட்ட வந்தாய் போலும்!" என்று அவன் இழிவாகப் பேசினான். சித்து விளையாடல் இங்கே சித்து விளையாடலைப் பற்றிச் சிறிது சிந்திக்க வேண்டும். சித்திகள் எட்டு வகை: அட்டமா சித்தி என்று சொல்வார்கள்; அனிமா, லகிமா முதலியவை; மிகச் சின்ன தாக இருப்பதைப் பெரிதாகக் காட்டுவது, மிகப் பெரியதாக இருப் பதைச் சிறியதாகக் காட்டுனது, நினைப்பதற்கு முன்னாலே நெடுந் தூரம் போவது போன்றவை அவை. இவற்றை எல்லாம் சித்துக்கள் என்று உலகவழக்கில் சொல்வார்கள். தவத்தில் சிறந்தவர்களுக்குச் சித்தி வந்து சித்திக்கும். ஆனால் அவற்றைப் பெரிதாக நினைக்க மாட்டார்கள். மனத்தை அடக்குவது போல வேறு சித்தி கிடையாது. "சினம் இறக்கக் கற்றாலும் சித்திஎல்லாம் பெற்றாலும் மனம் இறக்கக் கல்லார்க்கு வாய்ஏன் பராபரமே" என்று தாயுமானவர் பாடுவார். இராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்கிறார். ஒரு குருநாதரும், அவர் சீடனும் யமுனை ஆற்றின் அக்கரையில் ஒருவரும், இக்கரையில் ஒருவருமாக இருந்து தவம் செய்தார்கள். தவத்திலிருந்து விழித்துக் கொண்ட சீடன் யமுனையின் அக்கரையில் இருக்கும் தன் குருநாத ரைப் பார்த்து வரவேண்டுமென்று எண்ணினான். யமுனையில்