354 கந்தவேள் கதையமுதம் 'எதைச் செய்தாலும் செய்யாவிட்டாலும் சிந்தையை அடக்கிச் சும்மா இருப்பது முடியுமா? அதுதானே சுகம்? என்று தாயுமானவர் பாடுகிறார். உண்மையான சித்து மனத்தை அடக்குவதுதான். இக் காலத்தில் மக்கள் சின்னச் சின்னச் செப்பிடு வித்தைகளை எல்லாம் சித்து என்று நினைத்து ஏமாந்து விடுகிறார்கள். மாபெரும் சித்திகளைக்கூட அலட்சியமாக எண்ணுவார்கள் ஞானிகள். சூரபன்மன் பேச்சு சூரபன்மன் இங்கே ஞானியைப் போலப் பேசினான். "இது என்ன சித்து விளையாட்டப்பா? இதை யாரிடம் காட்டுகிறாய்? என்னுடைய ஆற்றலையும்,வலிமையையும் எண்ணாமல் எனக்குச் சமானமாக நீ உட்கார்ந்தாயே! இது ஒன்றே போதும், உன்னைக் கொல்வதற்கு. ஆனால் உன்னைக் கொல்ல விரும்பவில்லை. உன் தலையை என் வாளால் வெட்டி இருக்கலாம். அப்படிச் செய்யவில்லை. ஏன் தெரியுமா? உன்னிடம் கேட்க வேண்டியதைக் கேட்டுத் தெரிந்துகொண்டு பின்பு அந்தக் காரியத்தைச் செய்யலாம் என்று எண்ணுகிறேன் என்று சொன்னான் சூரன். என்னை எண்ணலை, எதிர்உற இருந்தனை : இதனால் மின்னல் வாட்படை உறைகழித்து ஒய்யென வீசிச் சென்னி வீட்டுவள்; நின்செயல் முற்றவும் தெரிந்து பின்னர் அத்தொழில் புரிவன்என் றேஉளம் பிடித்தேன். (அவை.புகு.90.) [உறை கழித்து - உறையினின்றும் உருவி. ஒய்யென - விரைவில், வீட்டுவன் - வீழ்த்துவேன்.] "என் பெருமை உனக்குத் தெரியுமா? போகங்களிலே சிறந்த இந்திர போகத்தைப் பெற்ற இந்திரன் இருக்கிறானே, அவன் என்னைக் கண்டு பயந்து மறைந்து போய்விட்டான். எந்தத் தேவரும் எனக்குச் சமானமாக வரமாட்டார்கள். வேறு 门苏 விஷ்ணுவும் என்னிடத்தில் வரமாட்டான். எனக்கு வாழ்த்துக் கூறிக்கொண்டேதான் பிரமன் திரிகின்றான். எல்லோருக்கும் பெரியவனாகிய பரமேசுவரன் என்னிடம் வரமாட்டான். இவ்வளவு துணிச்சலாக என்னிடம் வந்திருக்கிறாயே, நீ யார்?" என்று
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/374
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை