356 கந்தவேள் கதையமுதம் இப்படித் தம் பெருமையைச் சொல்லலாமா என்று கேட்கலாம் எதிரிகளுக்கு முன்னாலே தம் புகழைக் கூறலாம் என்று இலக்கணம் கூறுகிறது. அதற்கு மேல் முருகப் பெருமானுடைய பெருமையை எடுத்துச் சொன்னார் வீரவாகு தேவர். "நான் வணங்கும் தலைவனாகிய முருகன் எத்தகையவன் தெரியுமா? அவன் தாரகாசுரனைச் சங்காரம் பண்ணினான். மலை வடிவத்தில் இருந்த கிரௌஞ்சாசுரனைத் தொலைத்தான். உன்னை அங்கிருந்தபடியே கூ அழித்திருப்பான். ஆனால் மிக்க அருளினால் என்னை உன்னிடத்தில் அனுப்பினான்." தூதாக தார கப்பெயர் இனவலைத் தடவரை தன்னை ஓர்இறைக்குமுன் படுத்தவேல் அறுமுகத்து ஒருவன் சூர்எ னப்படு நின்னிடைத் தமியனைத் தூதாப் பேர ருள்திறத்து உய்த்தனன், என்றனன் பெரியோன். (அவை புகு. 96.) (இளவலை - உன் தம்பியை. வரை தன்னை - கிரௌஞ்ச மலையை. இறைக்கு முன் - கணப்போதிற்குள்ளே. படுத்த -அழித்த. பெரியோன் - வீரவாகு தேவர்.] 'நீ பெரிய தப்புக் காரியம் பண்ணியிருக்கிறாய். உன்னைத் தவறான பாதையிலிருந்து மாற்ற வேண்டும் என்பதற்காக நான் இங்கே வந்தேன். நீ இந்திரனையும், இந்திராணியையும் அவர் களுடைய இடத்தில் இருக்கவொட்டாமல் ஓட்டி விட்டு, தேவ லோகத்திற்கு நெருப்பை ஊட்டினாய். இந்திரனுடைய புதல்வன் சயந்தனையும், தேவர்களையும் சிறையில் வைத்திருக்கிறாய். இப்படி நீ செய்ததை எம்பெருமான் அறிந்தான். "" மருத்து வன்றனைச் சசியொடு துரந்து, சேண் வதிந்த கரத்தை ஆரழற்கு ஊட்டியே, அனையவன் புதல்வன் ஒருத்த னோடுபல் அமரரை உவளகந் தன்னில் இருத்தி னாய்,என வினவினன், அறுமுகத்'திறைவன். (அவை புகு. 98. } (மருத்துவன்றனை - இந்திரனை. சசி - இந்திராணி- துரந்து - ஓட்டி. சேண் வதிந்த புரம் - இந்திரன் நகரம். P.வளகம் - சிறை. வினவினன் - கேள்வியுற்றான்.] "நீ காசியபனுடைய பிள்ளை. தேவர்களும் காசியபருடைய தனயர்கள். அப்படிப் பார்த்தால் உனக்குத் தேவர்கள் சகோதரர்கள் கவேண்டும். சொந்தச் சகோதரர்களை இப்படிச் செய்யலாமா?
பக்கம்:கந்தவேள் கதையமுதம்.pdf/376
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை